states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கேரள முதலமைச்சர்  பினராயி விஜயன்

ஆர்எஸ்எஸ் இயக்க நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். காலனித்துவ உத்தியுடன் (பிரித்தாளும்) இணைந்த ஒரு பிளவுபடுத்தும் சித்தாந்தத்தை ஊக்குவிப்பதற்காக, சுதந்திரப் போராட்டத்தில் இருந்து விலகிய ஒரு அமைப்பை நியாயப்படுத்தும் ஒன்றிய அரசின் முயற்சி கண்டிக்கத்தக்கது ஆகும். இது நமது அரசியலமைப்பிற்கு பெரும் அவமானம் ஆகும்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா

பிரதமர் மோடி ஏன் ஆர்எஸ்எஸ் அமைப்பை பாராட்டுகிறார்? ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியதற்காகவா? சக இந்தியர்களைப் பற்றி தகவல் தெரிவித்ததற்காகவா? அல்லது சுதந்திரப் போராட்டத்தை எவ்வாறு அடக்குவது என்று பரிந்துரைத்ததற்காகவா? எதற்காக மோடி பாராட்டுகிறார்? விளக்கம் அளிக்க வேண்டும்.

சோனம் வாங்சுக் மனைவி கீதாஞ்சலி

எனது கணவர் சோனம் வாங்சுக் அவர்களின் உடனடி விடுதலைக்காக குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர், இந்திய சட்ட அமைச்சர் மற்றும் லடாக் துணைநிலை ஆளுநர் ஆகியோருக்கு கடிதம்  அனுப்பியுள்ளேன். ஒரு நகல் லே மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

நாட்டில் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இதற்கு வணிகம் சார்ந்த மாற்றம் மற்றும் நெருக்கடி எதுவும் கிடையாது. பாஜக கருப்பு பணத்தை தங்கமாக்குவதால், தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. தங்கம் விலை உயர்வுக்கு பாஜகவே காரணம்.