பிரதமர் மோடியின் தாயாரை அவமதிக்கவில்லை உண்மையான வீடியோவை வெளியிட்டு பாஜகவுக்கு ஆர்ஜேடி பதிலடி
பாட்னா பீகாரில் கடந்த ஆகஸ்ட் மாதம் பாஜக - தேர்தல் ஆணைய கள்ளக் கூட்டணியின் “வாக்கு திருட்டைக்” கண்டித்து ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர் ஜேடி), காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் இணைந்து “வாக்காளர் உரிமை யாத்திரை” என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டனர். இந்த வாக்காளர் யாத்திரை க்கு பீகார் மக்கள் அமோக வர வேற்பு அளித்தனர். இதனால் மிரண்டு போயுள்ள பிரதமர் மோடி, “பீகார் வாக்காளர் யாத்திரை யின் போது எனது தாயை ஆர்ஜேடி கட்சியினர் அவமதித்து விட்ட னர்” என குற்றம்சாட்டி அழுதார். மேலும் இதனை தொடர்ந்து பாஜக போலி வீடியோ ஒன்றை யும் வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த வீடியோவின் உண்மை தன்மை சந்தேகமாக உள்ளதாக ஊடகங்கள் குற்றம்சாட்டின. இந்நிலையில், வாக்காளர் யாத்திரையின் போது பிரதமர் மோடியின் தாயாரை அவமதிக்க வில்லை என்றும், பாஜக வெளி யிட்டுள்ள வீடியோ போலியானது என உண்மையான வீடியோவை வெளியிட்டு பாஜகவுக்கு ஆர் ஜேடி கட்சி பதிலடி கொடுத்துள் ளது. ஆர்ஜேடி பொதுச் செயலா ளரும், எம்எல்ஏவுமான டாக்டர் முகேஷ் ரவ்ஷான் பிரதமர் மோடி யின் தாயாரை அவமதித்ததாக கூறப்படும் அன்றைய நாளின் நேரலையை மீண்டும் பதிவிட்டுள் ளார். அதில் யாரும் பிரதமர் மோடி யின் தாயாரை பேசவில்லை. இதன்மூலம் போலி வீடி யோவை வெளியிட்டு பாஜக அரசியல் ஆதாயம் தேடுவது அம்பலமாகியுள்ளது.