இந்தியாவில் ராய்ட்டர்ஸ் செய்தி தளம் முடக்கம்
மோடி அரசுக்கு எதிராக வலுக்கும் கண்டனம்
புதுதில்லி சர்வதேச அளவில் புகழ் பெற்ற செய்தி நிறுவன மாக இருப்பது ராய்ட் டர்ஸ் ஆகும். இங்கிலாந்து நாட்டின் லண்டனை தலைமை யிடமாக கொண்டு செயல்படும் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 200 கிளை கள் உள்ளன. 2,500 பத்திரிகை யாளர்களும், 600 புகைப்பட பத்திரிகையாளர்களும் பணி யாற்றி வருகின்றனர். மொத்தம் 16 மொழிகளில் ராய்ட்டர்ஸ் நிறு வனம் செய்திகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியா வில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறு வனத்தின் டுவிட்டர் எக்ஸ் பக்கம் ஜூலை 5 இரவு முதல் திடீரென முடக்கப்பட்டுள்ளது. ராய்ட்டர் ஸின் முக்கிய கணக்கு (@Reuters), ராய்ட்டர்ஸ் உலகம் (@ReutersWorld) உள்ளிட்ட கணக்குகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. ராய்ட்டர்ஸ் டெக் நியூஸ், ராய்ட் டர்ஸ் பேக்ட் சேக், ராய்ட்டர்ஸ் ஆசியா, ராய்ட்டர்ஸ் சீனா போன்ற கணக்குகள் இந்தியா வில் அணுகும் நிலையில் உள்ளன. இதுகுறித்து ராய்ட் டர்ஸ் நிறுவனம் எந்த அறிக்கை யையும் வெளியிடவில்லை. ஆனால் மோடி அரசின் பரிந்து ரையின்பேரில் தான் ராய்ட்டர்ஸ் டுவிட்டர் எக்ஸ் பக்கம் முடக் கப்பட்டதாக செய்திகள் வெளி யாகியுள்ள நிலையில், உலகம் முழுவதும் இந்த சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வரு கின்றன. உண்மையை கூறினால் முடக்கம் மே மாதத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் “ஆபரேசன் சிந்தூர்” தாக்குதல் நடவடிக்கையை பாகிஸ்தான் பகுதிகளில் மேற் கொண்டது. ஆபரேசன் சிந்தூர், பாகிஸ்தான் பதிலடி தாக்குதல் தொடர்பாக உண்மை தகவல் கள் மறைக்கப்பட்ட நிலையில், பிபிசி, ராய்ட்டர்ஸ், சிஎன்என் என சர்வதேச முக்கிய ஊட கங்கள் ஆபரேசன் சிந்தூரின் உண்மை நிலைமையை அம்ப லப்படுத்தின. இத்தகைய சூழ லில் ராய்ட்டர்ஸின் டுவிட்டர் எக்ஸ் கணக்குடன் பல நூறு கணக்குகளை தடை செய்ய, ஒன்றிய மோடி அரசு எலான் மஸ்க் (டுவிட்டர் எக்ஸ் உரி மையாளர்) நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கைக்கு அடுத்து சீனா, பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட நாடுகளின் டுவிட்டர் எக்ஸ் கணக்குகள் முடக்கப்பட்டன. ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட சில முக் கிய சர்வதேச ஊடகங்கள் முடக்கப்படவில்லை. ஆனால் தற்பொழுது எந்த அறிவிப்பும் இல்லாமல், திடீரென ராய்ட் டர்ர்ஸ் டுவிட்டர் எக்ஸ் தளங்கள் முடக்கப்பட்டு இருப்பது கடும் சர்ச்சையையும், கண்டனத்தை யும் குவித்து வருகிறது. மோடி அரசு ஒப்பதல் இதுதொடர்பாக ஒன்றிய அரசின் செய்தித் தொடர்பா ளர் ஒருவர் கூறுகையில், “ஆப ரேஷன் சிந்தூர் நடவடிக்கை யின் போது ராய்ட்டர்ஸ் உள்பட பல்வேறு டுவிட்டர் எக்ஸ் கணக்குகளை முடக்குமாறு எக்ஸ் நிறுவனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும், அப்போது ராய்ட்டர்ஸ் டுவிட் டர் எக்ஸ் பக்கம் முடக்கப்பட வில்லை. அப்போதைய கோரி க்கையின் காரணமாக இப் போது முடக்கப்பட்டிருக்கலாம். டுவிட்டர் எக்ஸ் நிறுவனத்து டன் இணைந்து, அதனை சரி செய்வதற்கான பணி மேற் கொள்ளப்பட்டு வருகிறது” என அவர் கூறினார். இதன்மூலம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன கணக்கு முடக்கியதை மோடி அரசு ஒப்புக்கொண்டுள்ளது நிரூபணமாகியுள்ளது. ராய்ட்டர்ஸ் மட்டுமின்றி சீனாவின் குளோபல் டைம்ஸ், துருக்கிய பொது ஒளிபரப்பாள ரான டிஆர்டி நியூஸ் ஆகிய வற்றின் கணக்குகள் இந்தியா வில் ஜூலை 5 இரவு முதல் முடக்கப்பட்டுள்ளன. சட்டப் பூர்வ கோரிக்கைக்கு பதில ளிக்கும் விதமாக இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டதாக டுவிட்டர் எக்ஸ் கணக்குகள் குறிப் பிடுகின்றன.
அதானி - மோடி கூட்டணியின் சர்வதேச ஊழல்கள் அம்பலமாகிவிடும் என்று அச்சமா?
பிபிசி, ராய்ட்டர்ஸ், சிஎன்என் உள் ளிட்ட சர்வதேச ஊடகங்களின் செய்திகளை மேற்கொள்காட்டி ஆபரேசன் சிந்தூர், பாகிஸ்தான் பதி லடி தாக்குதல் தொடர்பாக உண்மை தகவல்களை செய்தி மற்றும் கட்டுரை யாக வெளியிட்டது இந்தியாவின் “தி வயர்” ஊடகம். ஆபரேசன் சிந்தூர், பாகிஸ்தான் பதி லடி தாக்குதலின் உண்மை விபரங்கள் தெரிந்தால் ஆட்சிக்கு குந்தகம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சி, “தி வயர்” ஊட கத்தை மே 9ஆம் தேதி மோடி அரசு முடக்கியது. உண்மை விபரங்களின் கட்டுரை நீக்கப்பட்ட பின்பே “தி வயர்” ஊடகம் மீண்டும் செய்லபாட்டுக்கு வந் தது. ஆனால் மோடி அரசு “தி வயர்” ஊடக தளம் முடக்கம் தொடக்கம் வெளிப்படையாக, அதாவது தற்போது ராய்ட்டர்ஸ் நிறுவனத்திற்கு அளித்த விளக்கத்தை போன்று காரணம், விளக்கம் அளிக்கவில்லை. “தி வயர்” நிறுவனம் முடக்கத்தை அறிவித்தப் பின்பே, சிஎன்என் கட்டு ரையை மேற்கோள்காட்டி வெளியிட்ட செய்தி தொகுப்பு மற்றும் கட்டுரைக்காக முடக்கினோம் என்று மட்டுமே மோடி அரசு விளக்கம் அளித்தது. ஆனால் தற்போது ராய்ட்டர்ஸ் நிறுவனம் முடக் கத்திற்கு விளக்கம் கேட்கவில்லை ; அறிக்கை கூட வெளியிடவில்லை. ஆனால் மோடி அரசு விளக்கம் அளித் துள்ளது. ராய்ட்டர்ஸ் நிறுவனத்தை கண்டு இவ்வளவு அச்சம் ஏன்? அதானி - மோடி கூட்டணியின் சர்வதேச ஊழல் கள் அம்பலமாகிவிடுமோ? என்ற அச் சத்தில் மோடி அரசு ராய்ட்டர்ஸ் நிறு வனத்தை நடுங்குகிறதா? என்ற கேள்வி எழுகிறது.