பூமியில் உயிர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாகக் கருதப்படும் ஓசோன் துளை இப்போது மீண்டு வருவதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்புகள், மனிதர்களுக்கு ஏற்படும் தோல் புற்றுநோய், கண்புரை உள்ளிட்ட அபாயங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவளையின் சப்தம், எறும்புகளின் நகர்வு ஆகியவற்றைக் கொண்டு வேத காலத்தில் எப்படி மழையைக் கணித்தார்கள்? என ஆய்வு மேற்கொள்கிறது தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம். 6 மாத ஆராய்ச்சி கொண்ட இத்திட்டத்தில் 36 இடங்களுக்கு 600 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். இவர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித் தொகையாகவும் கிடைக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தின் நிஹ்ரி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாறையின் இடிபாடுகள் ஒரு வீட்டின் மீது சரிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
பீகார் மாநிலத்தை தொடர்ந்து தில்லியிலும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) துவங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகையில்,”தில்லியில் எஸ்ஐஆர் தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், செயல்முறைக்கான அடிப்படை பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன” என கூறப்பட்டுள்ளன