இடதுசாரி மாணவர் கூட்டமைப்பினர் மீது கொலைவெறித் தாக்குதல்; கைது
ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் தில்லி காவல்துறை அடாவடி
தில்லி ஜவஹர்லால் நேரு பல்க லைக்கழகத்தில் (ஜேஎன்யு) வெள் ளிக்கிழமை அன்று பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) உள்ளிட்ட இடதுசாரி மாணவர் கூட்ட மைப்பு மீது ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி குண்டர்கள் தாக்கு தல் நடத்தினர். இந்த மாணவர்கள் பலர் காயமடைந்தனர். இந்நிலையில், ஏபிவிபி குண்டர் களின் காட்டுமிராண்டித் தனத்தை கண்டித்தும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும், சனியன்று மாலை எஸ்எப்ஐ தலைமையில் இடது சாரி மாணவர் குழுக்கள் வசந்த் குஞ்ச் காவல் நிலையம் நோக்கிப் பேரணியாக சென்றனர். அப்போது அமித் ஷா கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல் துறை பேரணியை தடுத்து நிறுத்தி, ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் நிதிஷ் குமார், துணைத் தலைவர் மணிஷா, பொதுச் செயலாளர் பாத்திமா உள்ளிட்ட 28 மாணவர்களை கைது செய் தது. தாக்குதலுடன் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக எஸ்எப்ஐ வெளி யிட்டுள்ள அறிக்கையில்,”தில்லி காவல்துறையினர் பேரணி சென்ற மாண விகளை தலைமுடியைப் பிடித்து இழுத்து தாக்குதலுடன் கைது செய்தது. மாணவிகளை கைது செய்ய பெண் காவ லர்கள் வரவில்லை. ஆண் காவலர்கள் தான் கைது நடவடிக்கையின் தாக்கு தல் நடத்தினர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அபிஷேக் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார்” என அதில் கூறப்பட்டுள்ளது.
