மராத்தா இடஒதுக்கீடு : நீதிபதி திடீர் விலகல்
மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு பெறுவதற்காக “குன்பி” ( மகாராஷ்டிரா அரசு வழங்கும் ஒரு வகை சாதிச் சான்றிதழ்) சாதிச் சான்றிதழ்களை வழங்கும் மகா ராஷ்டிரா அரசின் முடிவை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் அமைப்பு கள் தாக்கல் செய்த மனுக்களில், “மராத்தாக்களுக்கு குன்பி சான்றிதழ்க ளை வழங்குவது அவர்களை ஓபிசி பிரிவில் சேர்க்கும். இது ஏற்கெனவே உள்ள இடஒதுக்கீடுகளை பாதிக்கும்” என அதில் கூறப்பட்டுள்ளது. மனுக்கள் அனைத்தும் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரேவதி மோஹிதே டெரே, சந்தேஷ் பாட்டீல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்களன்று விசாரணைக்கு வந்தது. ஆனால் விசாரணையின் போது நீதிபதி சந்தேஷ் பாட்டீல்,“இந்த வழக்கை விசாரிக்க முடியவில்லை” எனக் கூறி, வேறு எந்தவொரு காரணத்தையும் குறிப்பிடாமல் விலகிக் கொண்டார். இதனால் திங்களன்று மராத்தா இட ஒதுக்கீடு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இனி மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர் மற்றும் நீதிபதி கவுதம் அன்காட் தலை மையிலான புதிய அமர்வின் முன் பின்னர் விசாரணைக்கு வைக்கப்படும் என மும்பை உயர்நீதிமன்ற பதிவாளர் கூறியதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.