மகாராஷ்டிரா : 2 நீதிபதிகள் பணிநீக்கம் மகாராஷ்டிர மாநிலம்
தாரா மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி யாக பணியாற்றி வந்த தனஞ்செய் நிகாம். இவர் மீது மோசடி வழக்கு ஒன்றில் கைதான நபருக்கு ஜாமீன் வழங்க இடைத்தரகர்கள் மூலம் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புகார் எழுந்தது. இதுதொடர்பாக நீதித்துறை நடத்திய விசாரணையில் லஞ்சம் கேட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் பட்டது. அதே போல பால்கர் மாவட்ட மூத்த சிவில் நீதிபதியாக பணியாற்றி வந்த இர்பான் ஷேக் மும்பையில் கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நடுவ ராக பணியாற்றிய போது, கடந்த 2022ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில் சிக்கினார். மருத்துவ பரிசோ தனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், நீதிபதிகள் தனஞ் செய் நிகாம், இர்பான் ஷேக் ஆகிய இருவரையும் மும்பை உயர்நீதிமன்றம் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. நீதித்துறைக்குள் நடக்கும் தவறான நடத்தைகளை எதிர்த்து இந்த கடுமை யான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மும்பை உயர்நீதிமன்றம் கருத்து தெரி வித்துள்ளதாக செய்திகள் வெளி யாகின.
