states

img

கனமழை நிலச்சரிவு இருவர் பலி

கனமழை நிலச்சரிவு இருவர் பலி

மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், விக்ரோலி என்ற பகுதியில்  ஏற்பட்ட நிலச்சரிவில் இருவர் பலியாகி யுள்ளனர். மேலும் இருவர் படுகாய மடைந்துள்ளனர்.  இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பைக்கு சிவப்பு எச்ச ரிக்கையை விடுத்துள்ளது. அதிகாலையில் விக்ரோலி மலைப் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஒரு வீட்டின் மீது மண் மற்றும் கற்கள் சரிந்து விழுந்ததில் அவ்வீட்டில் இருந்த நான்கு பேரில் இருவர் பலியாகினர். மற்ற இரண்டு பேர் படுகாயங்களு டன் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.  இமாச்சலிலும்  பலி எண்ணிக்கை உயர்வு இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஜூன் 20 முதல் பெய்துவரும் பருவமழை யால் இதுவரை 257 பேர் உயிரி ழந்துள்ளனர். இதில் மழை தொடர்பான சம்பவங்களில் மட்டும் 133, மழை விபத்துகளில் சிக்கி 124 பேரும் உயி ரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் பருவமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளால் 331 பேர் படுகாய மடைந்துள்ள நிலையில், 37 பேர் காணாமல் போயுள்ளனர்.