states

ஒடிசாவில் இந்துத்துவா குண்டர்கள் வன்முறை கட்டாக்கில் ஊரடங்கு

ஒடிசாவில் இந்துத்துவா குண்டர்கள் வன்முறை கட்டாக்கில் ஊரடங்கு

ஒடிசாவில் பாஜக ஆட்சி நடை பெற்று வருகிறது. முதலமைச்ச ராக மோகன் மாஜி உள்ளார். இந்நிலையில், ஒடிசாவின் கட்டாக் அருகே தெபிகரா பகுதியில் உள்ள நதி படித்துறை அருகே ஞாயிறன்று துர்கா சிலை கரைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பினர் இருசக்கர வாகனப் பேரணி நடத்தினர். வாகனப் பேரணியின் போது முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் பகுதியான தர்கா பஜாரில் விஎச்பி குண்டர்கள் அதிக சத்தத்துடன் பாடல்கள் பாடி, ஜெய் ஸ்ரீராம் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.  முஸ்லிம் மக்கள் இதனை தட்டிக் கேட்க விஎச்பி குண்டர்கள் தாக்குதல் மூலம் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். இந்தச் சம்பவத்தில் கட்டாக் துணை காவல் ஆணையர் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். 6 பேர் கைது செய்யப்பட்டனர். பதற்றத்தை தணிக்க 6,000 பாதுகாப்புப் படை வீரர்கள் கட்டாக் நகர் முழுவதும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கட்டாக் மாநகராட்சி, கட்டாக் வளர்ச்சி ஆணையம் மற்றும் 42 மௌஜா மண்டலம் ஆகிய பகுதிகளில்  இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிஎன்எஸ்எஸ் 163 பிரிவின் கீழ், ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிவரை கட்டாக் நகரில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.