சிபிஎம் எம்.பி சு.வெங்கடேசன்
மூத்த பத்திரிகையாளர்கள் சித்தார்த் வரதராஜன் மற்றும் கரன் தாப்பர் ஆகியோருக்கு பிஎன்எஸ் பிரிவு 152 இன் கீழ் அசாம் காவல்துறை சம்மன் அனுப்பியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஜனநாயகம் என்றால் என்னவென்று கேள்வி கேட்கும் பாஜக அரசின் பழி வாங்கும் நடவடிக்கைதான் இந்த சம்மன். ஊடக மற்றும் கருத்து சுதந்திரத்தை முடக்கும் இந்நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்
திரிணாமுல் எம்பி., மஹுவா மொய்த்ரா
அமித் ஷா, இம்முறை அவரது வழக்கமான இடத்தில் அமரவில்லை. 20 பேர் பாதுகாப்பு கொடுத்தும் அவர் 4 ஆம் வரிசையிலிருந்துதான் இந்த மசோதாவை முன்மொழிந்திருக்கிறார். இதை இந்தியா நினைவில் கொள்ளும்!
சிவசேனா (உத்தவ்) எம்.பி. சஞ்சய் ராவத்
மோடியும் அமித் ஷாவும் புதிய மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார்கள். சந்திரபாபு நாயுடுவும் நிதிஷ் குமாரும் தான் மிகவும் பயத்தில் இருக்கின்றனர். அவர்கள் ஒன்றிய அரசுக்கான தங்களின் ஆதரவை விலக்கிக் கொள்வார்களோ என மோடி பயப்படுவதால் தான் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
ஊடகவியலாளர் ராணா அய்யூப்
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படாமல், அவர்களை சிறைவைக்க வழி செய்யக் கொண்டு வரப்படும் மசோதா ஆபத்தானது. எதேச்சதிகாரத்தைத்தான் அந்த மசோதா வலுப்படுத்தும்.