states

img

பிஜு ஜனதா தளம் புறக்கணிப்பு

பிஜு ஜனதா தளம் புறக்கணிப்பு

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் செவ்வாய்க்கிழமை அன்று நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறுகிறது.  இந்த தேர்தலை புறக்கணிக்கப் போவ தாக ஒடிசா மாநில எதிர்க்கட்சியான பிஜு  ஜனதா தளம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் எம்.பி., சஸ்மித்  பத்ரா கூறுகையில்,”எங்கள் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் மற்றும் மூத்த  தலைவர்களிடையே நடந்த ஆலோச னைக்குப் பிறகு குடியரசு துணைத் தலை வர் தேர்தலை பிஜு ஜனதா தளம் புறக்க ணிக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணிகளிடம் இருந்து பிஜு ஜனதா தளம் கட்சி சமதூரத்தில் உள்ளது” என மழுப்பலாக கூறினார். பிஆர்எஸ் முன்னதாக குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாரையும் ஆத ரிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என  தெலுங்கானாவின் பிஆர்எஸ் கட்சி தெரிவித்திருந்தது. ஆனால்  திங்களன்று எந்த கூட்டணிக்கு ஆதரவு இல்லை என அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.