முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகனை “சைக்கோ” என அழைத்த பாலகிருஷ்ணா
அமராவதி ஆந்திராவில் தெலுங்கு தேசம் - பாஜக - ஜனசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக தெலுங்கு தேச தலை வர் சந்திரபாபு நாயுடுவும், துணை முதல மைச்சராக ஜனசேனா தலைவர் பவன் கல்யாணும் உள்ளனர். இந்த ஆந்திர அரசு மக்கள் நலன் பணியை விடமுன் னாள் முதலமைச்சரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோ கனை ஒடுக்க அல்லது சிறையில் அடை க்கவே முதன்மைப் பணியாக மேற் கொண்டு வருகிறது. மேலும் ஆந்திரா வில் பாஜக மாநில அரசுகளை போன்று வகுப்புவாத வன்முறையை தூண்ட தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் வியாழக்கிழமை அன்று சட்டம்-ஒழுங்கு விவாதம் நடை பெற்றது. இந்த விவாதத்தில் பாஜக எம்எல்ஏ சீனிவாஸ், “இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த ஜெகன் மோகன் ஆட்சி தெலுங்கு திரையுலகை புறக்க ணித்தார். முன்னணி திரைக்கலைஞர் கள் பலர் கடந்த ஆட்சியில் ஜெகனை சந்திக்க முயற்சி செய்தனர். ஆனால் அதை அவர் தவிர்த்துவிட்டார். மூத்த நடிகர் சிரஞ்சீவி தலையிட்டு பேசிய பிறகு தான் ஜெகன் திரை கலைஞர்க ளை சந்திக்க முன் வந்தார்” என்று பேசி னார். இவரது பேச்சுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏவும், நடிகருமான பாலையா என்றழைக்கப்படும் நந்தமூரி பால கிருஷ்ணா,“சைக்கோவை (ஜெகன்) சந்திக்க திரைத்துறை பிரதிநிதிகள் சென்றனர். ஆனால், சிரஞ்சீவியின் வலி யுறுத்தலால்தான் ஜெகன் மோகன் ரெட்டி கீழிறங்கி வந்ததாகவும் கூறுவது பொய்” என விமர்சித்தார். இதற்கு ஒய் எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கண்டனம் தெரிவித்து கடும் அமளி யில் ஈடுபட்டனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பதிலடி இதுதொடர்பாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளியிட் டுள்ள அறிக்கையில், “பாலகிருஷ்ணா எம்எல்ஏவாக இருக்கவே தகுதி அற்றவர். தங்களின் இஷ்டத்திற்கு வச னங்களை பேசுவதற்கு சட்டமன்றம் ஒன்றும் சினிமா செட் இல்லை. பால கிருஷ்ணாவுக்கு ஜெகன் உதவியுள் ளார். பாலகிருஷ்ணாவின் அகாண்டா படம் வெளியீட்டின் போது சில பிரச்ச னை எழுந்தன. அப்போது அவருக்கு ஜெகன் தனிப்பட்ட முறையில் உதவி செய்துள்ளார். பாலகிருஷ்ணா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டபோதும் ஜெகன் பல விதங்களில் உதவி செய்திருக்கிறார். அதையெல்லாம் மறந்துவிட்டு பேச லாமா? அரசியலில் ஸ்கோர் செய்வதற் காக உண்மைகளை மறப்பது எந்த வகையில் நியாயம்” என கேள்வி எழுப்பியுள்ளனர். சிரஞ்சீவி விளக்கம் இதனை தொடர்ந்து நடிகர் சிரஞ்சீவி வெளியிட்டுள்ள அறிக்கையில்,”கடந்த ஆட்சியின் போது தயாரிப்பு செலவு, டிக்கெட் விலை அதிகமாக இருந்த போது ஜெகன் மோகனை சந்தித் தோம். அப்போது அவர் எங்களின் பிரச்ச னைகளை கனிவுடன் கேட்டு உரிய நடவடிக்கையும் எடுத்தார். அதன் பிறகு டிக்கெட் விலை குறைக்கப்பட்டது. இது திரைத்துறையினருக்கு பெரும் உதவியாக இருந்தது.அப்போது என்னு டைய படம் வால்டர் வீரய்யா, பாலை யாவின் வீர சிம்மா ரெட்டி படங்கள் வெளி யாகி பலனடைந்தன” என்று கூறியுள்ளார். பதற்றம் சிரஞ்சீவியின் கருத்து ஆளும் கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற் படுத்தியுள்ளது. இந்த கருத்துகளை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் வேகமாக பரப்பி பதிலடி கொடுத்து வரு கிறார்கள். மேலும் ஜெகன் மோகனை “சைக்கோ” என அழைத்ததால் ஒய் எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர்போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இத னால் ஆந்திர மாநிலத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
