states

தீக்கதிர் விரைவு செய்திகள்

அரசு பங்களாவை காலி செய்ய  டி.ஒய்.சந்திரசூட்டிற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

உச்சநீதிமன்ற 50ஆவது தலைமை  நீதிபதியான டி.ஒய்.சந்திர சூட்டின் பதவிக்காலம் மே 31ஆம்  தேதியுடன் முடிவடைந்தது. பதவிக் காலம் முடிவடைந்த நிலையிலும் அவர்  அரசு பங்களாவை காலி செய்யாமல் உள்ளார்.  இந்நிலையில், முன்னாள் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட்டின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையிலும், அரசு பங்களாவை அவர்  காலி செய்யாமல் இருப்பதாக உச்சநீதி மன்றம், ஒன்றிய அரசுக்கு  கடிதம் எழுதி யுள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்ச கத்துக்கு உச்சநீதிமன்றம் எழுதிய கடி தத்தில்,”பதவிக்கலாம் முடிந்த பின்பும்  முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்  அரசு பங்களாவை விட்டு காலி செய்ய வில்லை. அதனால் கிருஷ்ணா மேனன் மார்க் பங்களாவில் இருந்து டி.ஒய்.சந்திர சூட்டை வெளியேற வைத்து, பங்களா வை உச்சநீதிமன்றத்திடம் ஒப்படைக்க  வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள் ளது. இதுகுறித்து சந்திரசூட் கூறுகை யில்,”எனக்கு வழங்கப்பட்ட வாடகை பங்களாவில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணி முடிவ டைந்ததும் நானே அங்கு சென்று விடு வேன்” என கூறினார்.  என்ன பிரச்சனை? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தில்லி கிருஷ்ணா மேனன் மார்க் தனி  பங்களா உள்ளது. டி.ஒய்.சந்திரசூட்டிற்கு  பிறகு 51ஆவது தலைமை நீதிபதியாக பொறுப்பெற்ற சஞ்சீவ் கன்னா தனக்கு பழைய பங்களா போதும் என்று கூறினார். அதே போல தற்போதைய 52 ஆவது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்,  சஞ்சீவ் கன்னாவைப் போலவே பழைய பங்களா போதும் என்று கூறிவிட்டார். இதனால் டி.ஒய்.சந்திரசூட் பங்களாவை காலி செய்யாமல் இதுநாள்வரை குடி யிருக்கிறார். தற்போது விதிகளின் படி  தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பங்க ளாவை காலி செய்ய டி.ஒய்.சந்திர சூட்டுக்கு ஒன்றிய அரசு மூலம் உத்தர விட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாட்னா

3 கோடி வாக்காளர்களை நீக்க பீகார் முழுவதும் விளம்பரம்

பீகாரில் இந்த ஆண்டு இறுதியில்  சட்டமன்ற தேர்தல் நடை பெறுகிறது. சிறும்பான்மையினர், தலித், பழங்குடியினர் என 3 கோடி வாக்குகளை தேர்தல் ஆணையத்தின் உதவியோடு நீக்க பாஜக சதி செய்து வருகிறது. இதற்கு எதிராக “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், 3 கோடி வாக்கா ளர்களை நீக்க பீகார் செய்தித்தாள் களில் தேர்தல் ஆணையம் ஞாயிறன்று   முதல்பக்கத்தல் விளம்பரம் வெளி யிட்டுள்ளது. அதில்,”வாக்காளர்கள் தேவையான ஆவணங்களை வழங்கினால், வாக்காளர் பதிவு அதிகாரி யின் சரிபார்ப்பு பணிகள் எளிதாக இருக்கும். ஒருவேளை தேவையான ஆவணங்களை நீங்கள் வழங்க முடியாவிட்டால், உள்ளூர் விசாரணை அல்லது பிற ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும். இறுதியில் தேர்தல் பதிவு அதிகாரி முடிவெடுப்பார்” என அதில் கூறப்பட்டுள்ளது.

“பாஜகவும், நிதிஷ் குமாரும் பீகாரை குற்றங்களின் தலைநகரமாக மாற்றிவிட்டனர்”

பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முத லமைச்சராக ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ் குமார் உள்ளார்.  இந்நிலையில், 3 நாட்களுக்கு முன் பாட்னாவில் பிரபல தொழிலதிபரும் “மகத்” மருத்துவமனை மற்றும் பல  பெட்ரோல் பங்க்களின் உரிமையாளரு மான கோபால் கெம்கா தனது வீட்டிற்கு வெளியே காரில் இருந்த போது மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  இந்தக் கொலை சம்பவம் சட்ட மன்றத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள பீகா ரில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பி யுள்ளது. இத்தகைய சூழலில் மக்க ளவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்  காந்தி, ஆளும்  பாஜக கூட்டணி மீது கடு மையான தாக்குதலைத் தொடுத்துள் ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் எக்ஸ்  பதிவில்,”பாஜகவும், நிதிஷ் குமாரும் இணைந்து பீகாரை நாட்டின் குற்றங்க ளின் தலைநகரமாக மாற்றிவிட்டனர் என்ப தற்கு தொழிலதிபர் கோபால் கெம்காவின்  படுகொலையே சாட்சி. மாநிலத்தில் குற்றச் செயல்கள் என்பது இயல்பாகி விட்டது. கொள்ளை, துப்பாக்கிச் சூடு,  கொலைகளின் நிழலில் பீகார் வாழ்கி றது. தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க முடியாத இந்த அரசை மக்கள் பதவி யிலிருந்து அகற்ற வேண்டும். மாநில  ஆட்சியை மாற்றுவதற்கான தேர்தல் இது வல்ல ; பீகாரைக் காப்பாற்றுவதற்கான தேர்  தல்” என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.