states

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

ரயில்வே நிலத்தை நீண்ட காலத்துக்கு குத்தகைக்கு விட ஒன்றிய அரசு ஒப்புதல்

புதுதில்லி, செப்.7- ரயில்வே நிலத்தை நீண்ட காலத்துக்கு குத்த கைக்கு விடுவதற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரின் கதி சக்தி திட்டத்தை அமல்படுத்  தும் வகையில், ரயில்வே நிலத்தை நீண்ட காலத்துக்கு குத்தகைக்கு விடும் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக, ஒன்றிய அமைச்சர்கள் செய்தியாளர் சந்திப்பில் தெரி வித்தனர். 300 சரக்கு முனையங்கள் அடுத்த 5  ஆண்டுகளில் உருவாக்கப்படும் என்றும் கூறினர். மேலும், தேசிய கல்வி கொள்கையின் முக் கிய அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் பிர தமரின் ஸ்ரீ பள்ளிகளை அமைக்கும் புதிய திட்டத்  துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், இதன் கீழ் கேந்திரீய வித்யாலயா, நவோதயா வித்யா லயா உள்ளிட்ட 14 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகள் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.

அக்டோபர் முதல் மின் கட்டண உயர்வு அமல்

சென்னை, செப்.7- ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் விரைவில் கிடைக்கவுள்ள தால், திருத்திய மின் கட்டண உயர்வு அடுத்த மாதம் முதல் நடை முறைக்கு வர வாய்ப்புள்ளதாக, மாநில மின்துறை அமைச்சர் செந்தில்  பாலாஜி கூறியுள்ளார். சென்னையில் புதனன்று செய்தி யாளர்களை சந்தித்த அமைச்சர், வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள  ஒரு லட்சத்து 45 மின் கம்பங்கள் தயா ராக உள்ளன என்றும், தாழ்வாக செல்லும் மின்வட கம்பிகள், வலுவற்ற  மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளதாக வும் தெரிவித்தார். தமிழகம் முழுவ தும் மின்சார வாரியம் சார்பில் 100  இடங்களில் மின் சார வாகனங்களுக் கான சார்ஜிங் பாய்ண்ட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சீனாவில் நிலநடுக்கம்: 74 பேர் பலி

பெய்ஜிங் : சீனாவின் தென்மேற்கு பகுதியான சிச்சுவான் மாகாணத்தின் கன்ஜி பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் (ரிக்டர் அளவில் 6.8) ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பல பகு திகளில் நில சரிவுகள் ஏற்பட்ட நிலையில், 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடு களில் சிக்கி 74 பேர் உயிரிழந்து உள்ளனர். 14 பேரை காணவில்லை. 170 பேர் காயமடைந்தனர்.

ராகுல் யாத்திரைக்கு சோனியா காந்தி வாழ்த்து!

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,570 கி.மீ. தூரத்துக்கு ராகுல் காந்தி நடை  பயணத்தைத் துவக்கியுள்ளார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநி லங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் என 150 நாட்கள் இந்த நடைப்பயணம் தொடர உள்ளது.  இந்நிலையில், இந்த யாத்திரைக்கு காங்கிஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரி வித்துள்ளார். “139 கோடி இந்தியர்கள் ஒரே நோக்கத்திற்காக ஒன்றிணைந்தால், அதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது; ‘பாரத் ஜோடா’ அனைத்து குரல்களுக்காகவும் ஒரே குரலில் போராடத் தொடங்கியுள்ளது. ராகுல் காந்தியின் பாதயாத்திரை இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு: நவ.1-இல் விசாரணை

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இட ஒதுக்கீடு முறை 2030 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலை யில், இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்த செயல்படுத்தப்படும் அரசியல் சாசனப் பிரிவு  330- 334 ஆகியவற்றை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் பல ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில்  நிலுவையில் இருந்து வருகின்றன. இந்நிலையில், இந்த மனுக்கள் நீதிபதிகள் டி.ஒய். சந்திர சூட், எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி, ஹீமா கோலி, பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் புதனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுக்கள் அனைத்தும் நவம்பர் 1-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியல் இடப்படும் என அறிவித்து, வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

‘வில் அம்பு’ யாருக்கு? செப்.27இல் விசாரணை

சிவசேனாவின் ‘வில் அம்பு’ சின்னத்தை ஷிண்டே அணிக்கு ஒதுக்க எதிர்ப்பு தெரிவிக்கும் உத்தவ் தாக்கரே மனு மீது செப்டம்பர் 27-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் செவ்வாயன்று விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளது. முன்னதாக ஷிண்டே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சின்னம் விஷயத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவை நீதிமன்றம் கட்டுப்படுத்த முடியாது என்று வாதிட்டார்.

‘கர்த்தவ்ய பாத்’ தீர்மானம் நிறைவேற்றியது!

புதுதில்லியில் தற்போது இந்தியா கேட் அருகே அமைந்துள்ள நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் சிலையிலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகை வரை அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ராஜ்பாத்’ சாலையை ‘காத்தவ்ய பாத்’ (கடமைப் பாதை) எனப் பெயர் மாற்றம் செய்வ தென மோடி அரசு முடிவு செய்தது. இந்நிலையில், புதனன்று நடைபெற்ற புதுதில்லி மாநகராட்சி மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேற்குவங்க அமைச்சர் வீட்டில் சிபிஐ ரெய்டு!

மேற்கு வங்கத்தில், சட்டவிரோதமாக நிலக்கரி வெட்டி எடுத்ததில், பல கோடி ஊழல் நடந்தி ருப்பதாக கூறி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதில் மம்தாவின் மருமகன் அபிஷேக்  பானர்ஜி மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலை யில் மேற்குவங்க மாநில சட்டத்துறை அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மோலோய் கட்டக்கின் அசன்சோலில் உள்ள வீட்டில் சிபிஐ புதனன்று சோதனை நடத்தியது. மேலும், அவருக்கு நெருக்கமான இடங்களிலும் சோதனை நடத்தி வருகிறது.

காங்கிரஸ் யாத்திரையை பாக்.கில் நடத்தவாம்

“1947-ல் காங்கிரஸ் தலைமையின் கீழ்தான் இந்தியா பிளவுபட்டது. எனவே,  தற்போது ‘இந்தியா ஒற்றுமை’ யாத்திரை என்றால் காங்கிரஸ் பாகிஸ்தா னுக்குத்தான் செல்ல வேண்டும். இந்தியா ஒற்றுமையாக இருப்பதால் ராகுல் காந்தி இந்த யாத்திரையை பாகிஸ்தானில் நடத்த வேண்டும்” என அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் நடைப்பயணத்தால் பாஜக அச்சம்

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ‘இந்தியாவை ஒருங்கிணைப்போம்’ என்ற 150 நாள் யாத்திரையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமையன்று துவங்கினார்.  இதனை பாஜக தலைவர்கள் விமர்சித்துள்ள நிலையில், “ஒன்றிய அரசுக்கு எதிராக அனை வரையும் ஒன்றிணைப்பதையே கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான வரலாற்று சிறப்பு மிக்க பாதயாத்திரை பிரதிபலிக்கிறது. இந்த நடைப்பயணத்தை கண்டு பாஜக அச்சமடைந்துள்ளது” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள மகாராஷ்டிராவின் நாக்பூர் அலு வலகத்திற்கு ஏற்கெனவே சிஐஎஸ்எப் எனப்படும் மத்திய தொழிலகப் படையின் பாதுகாப்பு  அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தில்லி ஜண்டேவாலன் பகுதியில் அமைந்துள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கும், சிஐஎஸ்எப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பொறுப்பு  அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு அவர்களின் கீழ் நவீன ஆயுதங்கள் ஏந்திய கமாண்டோக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

உ.பி.யில் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிந்து வரத் தடை!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் முறையான உடை அணிந்து  அலுவலகங்களுக்கு வர வேண்டும், ஜீன்ஸ், டி-ஷர்ட் போன்ற கேஷுவல் உடைகளை அணியக்கூடாது என்று மாவட்ட நிர்வாக அதிகாரி ஷிவேஷ் குமார் குப்தா தெரிவித்துள்ளார். மேலும், இனி ஜீன்ஸ், டி-ஷர்ட் உள்ளிட்ட உடைகளை அணிந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

பிரிட்டன் உள்துறை அமைச்சராக இந்திய வம்சாவளி பெண்

பிரிட்டனின் புதிய உள்துறை அமைச்சராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சுவல்லா பிரேவர்மேன் நியமிக்கப்பட்டுள்ளார். போரீஸ் ஜான்சன் அமைச்சரவையில் ஏற்கெனவே அந்த பதவியை இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரித்தி பட்டேல் வகித்து வந்தார். சுவல்லா பிரேவர்மேன் தாயார் உமா, தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். 1960-ஆம் ஆண்டு இங்கி லாந்தில் குடியேறிய உமா, அங்கு கென்யாவைச் சேர்ந்த கிறிஸ்டி பெர்னாண்டஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

முதலமைச்சர் மீது அவதூறு: அதிமுக நிர்வாகி கைது

கோவை,செப்.7- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பம் குறித்து அவ தூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கோவை மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி  நிர்வாகி சுப்பிரமணியம் என்பவரை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது  செய்து சிறையில் அடைத்தனர். கோவை அன்னூர் அருகேவுள்ள மசக்கவுண்டன் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி தலைவராக இருந்து வருகிறார். இவர் சமூக வலைத்தளங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்தும் அவரது குடும்பம் குறித்தும் அவதூறு பரப்பியதாக சைபர் கிரைம் காவல் துறையினருக்கு புகார் வந்தது.இதனையடுத்து (செப். 6) அவர் பணி புரியும் அலுவலகத்திற்குச் சென்ற  காவல் துறையினர், சுப்பிரமணி யத்தை மாவட்ட சைபர் கிரைம் அலுவல கத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்பட நான்கு பிரிவுகளில்  வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணி யத்தை கைது செய்தனர். பின்னர் அவர்  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

11 வயது சிறுவன் உடல் உறுப்புகள் தானம்

வேலூர், செப். 7 - வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொசவன் புதூர் கிராமத்தைச்  சேர்ந்தவர்  கோவிந்தராஜ். இவரது 11 வயது மகன் சுதீஷ். இம் மாதம் 4 ஆம் தேதி  சாலையில் நடந்து சென்ற போது வாகனம் மோதியதில் படுகாய மடைந்தார். உடனடியாக வேலூர் சிஎம்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுவன் மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து அவரது பெற்றோர்கள் ஒப்புதலின் பேரில் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.  அதன் அடிப்படையில் இதயம்  சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கும், நுரையீரல் சென்னை அப்போலோ   மருத்துவமனைக்கும்,  கல்லீரல், இடது சிறுநீரகம், கண்கள்  வேலூர் சிஎம்சி  மருத்துவமனைக்கும், வலது சிறுநீரகம் எஸ்ஆர்எம் சென்னை மருத்துவ மனைக்கும் வழங்கப்பட்டது.



 





 

;