திருவனந்தபுரம், நவ.2- உலகின் அதிநவீன கிராபீன் ஆரா ய்ச்சியில் பங்கேற்க, கேரளா மற்றும் நாட்டின் முதல் கிராபீன் கண்டுபிடிப்பு மையம் (IICG) தயாராகி வருகிறது. ஏப்ரல் மாதம் திருச்சூரில் உள்ள கள மசேரி கின்ஃப்ரா ஹைடெக் பூங்காவில் இம்மையம் செயல்படத்தொடங்கும். அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில் துறைக்கு புதிய உத்வேகம் அளிக்கும் இத்திட்டத்தின் கட்டுமானம் மற்றும் துணைப் பணிகள் மார்ச் மாதத் திற்குள் நிறைவடையும். ஆரம்ப ஆராய்ச்சி நடவடிக்கைகள் கேரள டிஜிட் டல் பல்கலைக்கழகத்தில் தொடங்கப் பட்டுள்ளன. இத்திட்டத்திற்கு மாநில அரசு ரூ.86.42 கோடிக்கு அனுமதி வழ ங்கியுள்ளது. இது டிஜிட்டல் பல்கலைக் கழகம் மற்றும் சென்டர் ஃபார் மெட்டீரி யல்ஸ் ஃபார் எலக்ட்ரானிக்ஸ் டெக்னா லஜி (C-MET) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். ஒன்றிய அரசின் முதல் தவணையாக ரூ.49.19 கோடி நிதியுதவியை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்கியுள்ளது. இந்த ஆண்டு மாநில அரசின் பங்காக ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.7 கோடியை டாடா ஸ்டீல்ஸ் நிறுவனம் ஏற்கும். ரூ.4.48 கோடி நன்கொடையாகும்.
கிராபீன் கனிமத்தின் வணிகத் திறன் உண்மையாகி வருகிறது. மொபைல் ஃபோன்களில் விலையுயர்ந்த இண்டி யம் பயன்பாட்டுக்குப் பதிலாக, ஆர்கா னிக் எல்இடி டிஸ்ப்ளேக்களில் கிராபீனின் பயன்பாடு, செல்போன் விலைகளை கடுமையாக குறைக்கும். பயோமெடிக் கல், பாதுகாப்பு, எலக்ட்ரானிக்ஸ், சென்சார்கள், ஸ்மார்ட் சாதனங்கள், மின்தேக்கிகள், ஆற்றல் சேமிப்பு செல்கள், பேட்டரிகள், மெல்லிய பட சாதனங்கள் முதல் சமையலறை உபகர ணங்கள் வரையிலான துறைகளில் கிராபீன் கொண்ட 2டி பொருட்களின் பயன்பாடு புரட்சியை ஏற்படுத்தும். முதல் கட்டமாக எலக்ட்ரானிக்ஸ், ரப்பர், சிமெண்ட் மற்றும் எரிசக்தி துறை களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இது மாணவர்கள், ஆராய்ச்சி யாளர்கள், தொழில்கள், ஸ்டார்ட் அப்கள், பரிசோதனைகள் மற்றும் கட்டு மானத்திற்கான வாய்ப்புகளை வழங்கும். கிராபீன் தயாரிப்பு மேம்பாட்டில் முதலீட்டாளர்களை ஈர்க்க முடியும். இவ்விபரங்களை டிஜிட்டல் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர். சஜி கோபிநாத் கூறினார்.
அதிசயப் பொருள் கிராபீன்
வைரத்தை விட கடினமானது கிராபீன். இரும்பை விட பத்து மடங்கு வலிமையானது. இது கார்பனின் ஒற்றை அடுக்கு பதிப்பாகும். கிராபீன், அசாதாரண மின் மற்றும் மின்னணு பண்புகள் கொண்ட ஒரு ‘அதிசயப் பொருள்’ ஆகும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒரு புதிய சகாப்தத்தை இது உருவாக்கவல்லது. இது சிலிக்கானை மாற்றக்கூடிய ஒரு சிறந்த மின் மற்றும் வெப்ப கடத்தியும் ஆகும்.