மராத்தி பேச முடியாது என்று கூறிய பாஜக ஆதரவு நிறுவனம் சூறை
மும்பை இந்தி மொழி திணிப்பு எதிரொலி
மகாராஷ்டிரா மாநிலத்தின் தாய் மொழியான மராத்தியை ஒழிக்கும் நோக்கத்தில், அம்மாநில பாஜக கூட்டணி அரசு கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி, “தேசிய கல்விக் கொள்கையின் கீழ் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 3ஆவது மொழியாக இந்தி மொழி கற்பது கட்டாயம்” என அறிவித்தது. இதற்கு மகாராஷ்டிரா முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இந்தியா கூட்டணி யில் அங்கம் வகிக்கும் சிவசேனா (உத் தவ்), முன்னாள் பாஜக கூட்டாளியான நவநிர்மாண் சேனா ஆகிய இரண்டு கட்சி களும் இந்தி திணிப்புக்கு எதிராக பேரணி நடத்துவதாக அறிவித்தன. இந்த போரா ட்ட அறிவிப்பிற்கு கண்ட மகாராஷ்டிரா பாஜக அரசு இந்தி மொழி திணிப்பை வாபஸ் பெற்றது. எனினும் மாநிலம் முழு வதும் இந்தி திணிப்புக்கு எதிரான நிலை உருவெடுத்துள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிரா தலை நகர் மும்பை அருகே மீரா சாலையில் “வீ வொர்க்” என்ற பெயரில் இனிப்புக் கடை உள்ளது. இது மும்பையின் பிரபல இனிப்புக் கடைகளில் ஒன்றாகும். இதன் உரிமையாளர் சுஷில் கேடியா பாஜக ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. இத்த கைய சூழலில் வாடிக்கையாளர் ஒருவரி டம்,”மராத்தி பேச முடியாது; கற்க முடி யாது. இந்தியில் தான் பேசுவேன்” என இனிப்புக்கடை நிறுவன பொறுப்பாளர் ஒருவர் கூறியதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் காட்டுத் தீயாக மாநி லம் முழுவதும் பரவ ராஜ் தாக்கரேவின் “மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா” கட்சி யினர்,”மகாராஷ்டிராவில் மராத்தி மட்டுமே. இந்தியை அனுமதிக்க மாட் டோர்ம்” என முழக்கங்களை எழுப்பி “வீ வொர்க்” இனிப்புக் கடையை அடித்து நொறுக்கி சூறையாடினர். ஆனால் நவ நிர்மாண் சேனா கட்சியினர் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதுதில்லி “பாஜகவும், நிதிஷ் குமாரும் பீகாரை குற்றங்களின் தலைநகரமாக மாற்றிவிட்டனர்” பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முத லமைச்சராக ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ் குமார் உள்ளார். இந்நிலையில், 3 நாட்களுக்கு முன் பாட்னாவில் பிரபல தொழிலதிபரும் “மகத்” மருத்துவமனை மற்றும் பல பெட்ரோல் பங்க்களின் உரிமையாளரு மான கோபால் கெம்கா தனது வீட்டிற்கு வெளியே காரில் இருந்த போது மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை சம்பவம் சட்ட மன்றத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள பீகா ரில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பி யுள்ளது. இத்தகைய சூழலில் மக்க ளவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, ஆளும் பாஜக கூட்டணி மீது கடு மையான தாக்குதலைத் தொடுத்துள் ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் எக்ஸ் பதிவில்,”பாஜகவும், நிதிஷ் குமாரும் இணைந்து பீகாரை நாட்டின் குற்றங்க ளின் தலைநகரமாக மாற்றிவிட்டனர் என்ப தற்கு தொழிலதிபர் கோபால் கெம்காவின் படுகொலையே சாட்சி. மாநிலத்தில் குற்றச் செயல்கள் என்பது இயல்பாகி விட்டது. கொள்ளை, துப்பாக்கிச் சூடு, கொலைகளின் நிழலில் பீகார் வாழ்கி றது. தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க முடியாத இந்த அரசை மக்கள் பதவி யிலிருந்து அகற்ற வேண்டும். மாநில ஆட்சியை மாற்றுவதற்கான தேர்தல் இது வல்ல ; பீகாரைக் காப்பாற்றுவதற்கான தேர் தல்” என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.