states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா

நாட்டில் என்ன நடந்தாலும், நாட்டின் நலனுக்காக முஸ்லிம்கள் அனைத்து தீமைகளுக்கும் எதிராக ஒன்றுபட வேண்டும். அமைதியைக் காணும் ஒரே வழி ஒன்றுபடுதல் மட்டுமே. தற்போதைய காலத்தில் மதம், சாதி, இனம், பேதமின்றி ஒற்றுமையாக இருப்பது மிக முக்கியமான ஒன்று.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

நீதிமன்றங்களில் சில ஊழியர்களின் முரட்டுத்தனமான நடத்தை குறித்து புகார்கள் வந்ததுள்ளது. அதனால் நீதிமன்றத்தின் நற்பெயரைப் பாதுகாக்க நீதிபதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிபதிகளின் நடவடிக்கை தற்போதைய தலைமுறை எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் பின்னணியில் இருக்க வேண்டும்.

காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆலோசனை இல்லாமல் அவசரத்தில் பீகாரில் வாக்காளர் நீக்கம் போன்று ஒரு முடிவை அறிவித்தார். இப்போது அழுத்தம் வந்தவுடன் பின்வாங்குகிறார். விளம்பரம் ஒன்றும் வந்துள்ளது. விளம்பரத்தில்,”ஆவணங்கள் இப்போது சமர்ப்பிக்க தேவையில்லை, படிவத்தை நிரப்பி, ஆவணங்கள் உள்ளதா? இல்லையா? எனக் குறிப்பிடவும்” எனக் கூறப்பட்டுள்ளது. இது என்ன வேடிக்கை.

சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத்

எங்களது போராட்டம் இந்தி மொழியை எதிர்ப்பது அல்ல. ஆனால், பள்ளிகளில் இந்தியை திணிக்க கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். தென் மாநிலங்கள் இந்தப் பிரச்சனைக்கு எதிராக பல ஆண்டுகளாக போராடி வருகின்றன.