குஜராத் மாநிலத்தில் ரோப்காரின் கேபிள் அறுந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளமர்.
குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 2,600 அடி உயரத்தில் அமைந்துள்ளது பாவாகத் மலைக் கோயில். இந்த கோயிலில் இருந்து ரோப்கார் மூலம் பொருள்களை ஏற்றி கீழே சென்று கொண்டிருந்தபோது, நடுவழியில் கேபிள் அறுந்ததில் ரோப்கார் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ரோப்காரில் பயனித்த இரண்டு லிஃப்ட்மேன்கள், இரண்டு தொழிலாளர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கேபிள் அறுந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.