சுவீடன்,அக்டோபர்.07- மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஆம்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1901ஆம் ஆண்டிலிருந்து மருத்துவத்துறையில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்கள் மற்றும் சாதனை புரிந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு microRNA வை கண்டுபிடித்ததற்காக விக்டர் ஆம்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்படுவதாகச் சுவீடனைச் சேர்ந்த கரோலின்ஸ்கா நிறுவனத்தின் நோபல் பேரவை அறிவித்துள்ளது.
இவர்களது கண்டுபிடிப்பு உயிரினங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செயல்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்வதற்கு அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது