science

img

சூப்பர் பக் மூன் பார்க்க நீங்க ரெடியா?

சூப்பர் பக் மூன் என்றைழைக்கப்படும் முழு நிலவு இந்தியாவில் இன்று இரவு 7.42 மணிக்குப் பிறகு தெரியவுள்ளது.
சூப்பர் பக் மூன் என்பது ஒரு வானியல் நிகழ்வு. இது சந்திரன் பூமிக்கு மிக அருகில் வரும்போது நிகழ்கிறது. எனவே நிலா வழக்கத்தைவிட வளர்ந்தும், பிரகாசமாகவும் தெரியும்.
இந்த நிகழ்வானது இந்தியாவில் இன்று இரவு 7.42 மணிக்கு மேல் தெரியும் எனவும் இந்தியாவின் எல்லா இடங்களிலிருந்தும் நிலவினை காணலாம் எனவும் வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சூப்பர் பக் மூன் என்ற பெயர் வட அமெரிக்க பழங்குடி மக்களால் வைக்கப்பட்டது. ஜூலை மாதத்தில் ஆண் மான்களுக்கு (Bucks) புதிய கொம்புகள் வளரத் தொடங்கும் காலம் என்பதால், இந்த முழு நிலவுக்கு "பக் மூன்" என்று பெயரிடப்பட்டது.