politics

img

ஈரானுக்கு எதிரான போர் - ஒன்றிய அரசின் இழிவான அணுகுமுறைக்கு சிபிஎம் கண்டனம்!

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணி கட்டவிழ்த்துவிட்ட சட்டவிரோதப் போரை நோக்கி ஒன்றிய அரசு காட்டும் வருந்தத்தக்க அணுகுமுறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.
இது குறித்து சிபிஎம் அரசியல் தலைமைக்குழு தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"ஒன்றிய அரசின் மௌனமும், செயலற்ற தன்மையும் இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறதோடு, நாட்டின் நீண்டகால ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் அணிசேரா பாரம்பரியத்தையும் பலவீனப்படுத்துகிறது. உடனடியாக, போரை நிறுத்த மோடி அரசு வலியுறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து மேற்கு ஆசியாவில் வேலை செய்யும் ஒரு கோடி பேரின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஒன்றிய அரசை சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்துகிறது." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.