politics

img

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்!

பற்றி எரியும் மத்திய கிழக்கு, எண்ணெய் விலை உயர்வு, ஈரானில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட விவகாரங்களில் மோடி அரசு அமைதியாக இருப்பதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்.28-ஆம் தேதி தாக்குதல் தொடங்கிய நிலையில், இரு நாடுகளுக்கு எதிராக ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் கடும் ஏற்றத்தை சந்தித்து வருகிறது. அதே சமயம், ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய தொழிலாளர்களை மீட்பதில் மோடி அரசு தாமதித்து வருகிறது. இந்த நிலையில் இவ்விவகாரங்களில் மோடி அரசு அமைதியாக இருப்பதையும், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரியும் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.