இந்தியா - அமெரிக்க ஒப்பந்தம் குறித்துத் தனக்கு ஒன்றும் தெரியாது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஊடகத்திற்கு பேட்டி அளித்திருப்பது ஆச்சர்யப்படுவதற்கில்லை என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
இந்தியா - அமெரிக்க ஒப்பந்தம் குறித்துத் தனக்கு ஒன்றும் தெரியாது, அது பியுஷ் கோயல் அமைச்சகத்தால் கையாளப்பட்டது என்று சொல்லும் இவர்தான் நம் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர்.
ராணுவம் சார்ந்த முடிவுகளையே ராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கால் எடுக்க முடியாதபோது இது ஒன்றும் அவ்வளவு பெரிய தவறில்லைதான்.
இன்னும் ஒருபடி மேலே சொல்ல வேண்டுமென்றால் ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட முடிவுகள் என்னவென்பது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியானால்தான் அது பிரதமருக்கேத் தெரிய வரும் என்றால் அது ஆச்சர்யப்படுவதற்கில்லை. இதனால்தான் நாடாளுமன்றத்தில் பேச மறுத்தார் நம் பிரதமர்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
