internet

img

பழைய சொல், புதிய தேடல் ‘தலித்’

ஏழு முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி வீரேந்திர குமார் இடைக்கால மக்களவை சபாநாயகராக  நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர். அது என்ன ‘தலித்’ ? இந்திய மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினர் தலித் என்கிறது 2011 தேசிய மக்கள்  தொகை கணக்கெடுப்பு. தலித் மக்களை - மத்திய அரசு ‘பட்டியல் இனத்தவர் (Scheduled  caste)’ என்றும் தென் இந்திய மாநில அரசுகள் ஆதி தெலுங்கர், ஆதி கன்னடர், ஆதி திராவிடர்  எனவும் பட்டியலிட்டுள்ளது. 

தமிழ்நாட்டில்  87 சாதிகள் (தமிழக அரசின் படி 76) தலித்கள்  என்கிறது ஒரு புள்ளி விவரம். தலித்  என்பது மராட்டிய சொல். இச்சொல் dalita என்கிற சமஸ்கிருத சொல்லிலிருந்து வந்தது.  இச்சொல்லிற்கு divided, split, broken, scattered என்பதாகப் பொருள் கொள்ளப்படு கிறது. dalita என்றால் பிராமணிய சாதிகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று பொருள்.  தலித் - இச்சொல்லை அரசியல் ரீதியாக முதலில் பயன்படுத்தியவர் மகாத்மா ஜோதிராவ்  பூலே. இவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். மராட்டியத்தில் மகார், மாங்கு, சாமர்,  தோர் எனப் பல சமூக மக்களை ஒற்றை சொல்லால் அழைக்க ஒரு சொல் தேவைப்பட்டது.  அச்சொல் ‘தலித்’. இச்சொல்லை இந்தியா முழுமைக்கும் பிரபலபடுத்தியவர் அர்ச்சுனன்  டாங்களே. ரிக் வேதம் ‘புருஷ சுக்தம்’ என்கிற பத்தாவது அத்யாயம் பிறப்பின் அடிப்படையிலான பேதத்தைக் கற்பிக்கிறது.  ஐந்தாம் வர்ணமான இவர்கள் பாதத்திலிருந்து பிறந்தவர்கள் ;  சண்டாளன், பஞ்சமன் என்கிறது மநு. ஜோதிராவ் பூலே, இம்மக்களை அழுத்தப்பட்டவர்கள் (SUPPRESSED) என்றும்  டாக்டர் அம்பேத்கர்  DEPRESSED (ஒடுக்கப்பட்டவர்) எனவும் அடையாளப்படுத்தினார்கள். அர சியலமைப்பில் Scheduled Jati என்பதை Caste  என மாற்றியவர் டாக்டர் இராஜேந்திர  பிரசாத்.  இங்கு Caste என்பது ஸ்பானிய சொல்லின் திரிபு. இங்கு jati என்பது பிறப்பு,  Caste என்பது வகுப்பு. ஆங்கிலேயர்கள் OUT CASTES; பிராமணியம் - PANCHAMA; காந்தி - அச்சுத் (தீண்  டத்தகாதவர்); அயோத்திதாசர் பண்டிதர் - சாதிகளற்ற ஆதிதிராவிடர்; பெருந்தலைவர் எம்.சி. ராஜா - ஒடுக்கப்பட்ட இந்துக்கள்; இரட்டைமலை சீனிவாசன் - சாதியற்ற இந்துக்கள் என்றார்கள். குஜராத்தி தலித் எழுத்தாளர்கள் கூடி ‘பகுஜன் சாகித்ய சங்குல்’ என்கிற அமைப்பை ஏற்படுத்தி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயப் பிரிவுகளை உள்ளடக்கி தலித் சொல்லிற்கு நிகராக ‘பகுஜன்’  என்கிற சொல்லைப் பயன்படுத்தத் துவங்கினார்கள். கன்சிராம் தலித் சொல்லிற்கு மாற்றாக பகுஜன் எனப் பயன்படுத்தினார்.

தென் ஆப்பிரிக்காவில்  தீண்டத்தகாத தமிழர்கள் ‘கூலிகள்’ என அழைக்கப்பட்டார்கள்.  காந்தியடிகள் சென்னை வருகையில் அச்சுத், கூலிகள்,  தீண்டத்தகாதவர்கள் என்கிற சொற்கள் தங்களை வலியடையச் செய்வதாகத் தெரிவித்ததால் அச்சொல்லுக்கு மாற்றாக  ஹரிஜன என்கிற சொல்லைப் பயன்படுத்தினார். ஹரி - திருமால். இதனால் சிவன் வழிபாட்டினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஹரிஜனம்  என்பதற்கு கடவுளின் குழந்தை என விளக்கம் தந்தார் காந்தி. ஹரிஜன என்கிற சொல்லை  முதலில் துளசிதாஸர் தன் இராமாயணக் கதையில்  பயன்படுத்தினார். நரஸிம் மேத்தா  என்கிற கவிஞர் ஹரிஜனம் என்கிற சொல்லைத் தன் கவிதைகளால் பிரபலப்படுத்தினார்.  இவர் காந்திக்கு பிடித்தமான கவிஞர். 

1982ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் ஓர் உத்தரவை  பிறப்பித்தது. அதில், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் “ஹரிஜன்”  என்ற வார்த்தையைப் பிரயோகிக்க வேண்டாம் என ஆணைப் பிறப்பித்தது.  2018 மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு அளிக்கப்படும் அரசு ஆவணங்களில் “தலித்” என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம் என உத்தரவிட்டது. Dalit என்கிற சொல்லிற்கு நிகரான  உலகச் சொற்கள் -APARTHEID (அமெரிக்கா), RACISM (தென் ஆப்ரிக்கா), ACHHOOT (பூடான்), NEECH JATI (நேபாளம்), Taboo (பிரிட்டன்), low ( பாகிஸ்தான்),... அமெரிக்காவில் கறுப்பின (நீக்ரோ) இலக்கியவாதிகள் வெள்ளையர்களின் ஆதிக்கத்திற்கு எதிரான சமூக மாற்றத்திற்காக BLACK PANTHER (கறுஞ்சிறுத்தை) என்றொரு அமைப்பை உருவாக்கினர். இவர்களின் தாரக மந்திரம் இனவெறியை எதிர்க்கும் இனவெறி. இதன் நீட்சியாக இந்தியாவில் 1972 ஆம் ஆண்டு அர்ஜூன் டாங்களே, ஜே.வி.பவார், தியோ தாசல் மூவரின் முயற்சியால் ‘தலித் சிறுத்தைகள்’ எனும் அரசியல் அமைப்பு தோன்றியது.  தலித் என்பதற்கு ஒடுக்கப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர், ஹரிஜனம், கூலி, அழுத்தப்பட்ட வர், பட்டியல் இனத்தவர், பஞ்சமர், சண்டாளர், ... என பல ஒடுக்குமுறையிலான  சொற்க ளால் அடையாளப்படுத்தப்பட்டாலும் தலித் என்பது இன்று ‘சாதியற்றவர்’ என்பதாகப் பொருள்கொள்ளப்படுகிறது.