internet

img

இணைய சேவை முடக்கத்தில் 2ஆவது இடத்தில் இந்தியா!

2024ஆம் ஆண்டில் அதிகளவு இணைய சேவையை முடக்கிய 54 நாடுகளில் இந்தியா 2ஆவது இடத்தில் உள்ளது. 
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் Access Now என்னும் சர்வதேச அமைப்பு அதிகளவில் இணைய சேவையை முடக்கும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுவருகிறது.
அந்த வகையில் இந்தாண்டு நடத்திய ஆய்வில் இணைய சேவையை 296 முறை முடக்கிய 54 நாடுகளின் பட்டியலில் 85 முறை இணைய சேவையை முடக்கி முதலிடத்தில் மியான்மாரும், 84 முறை இணைய சேவையை முடக்கி இரண்டாம் இடத்தில் இந்தியாவும் உள்ளது. 
இந்தாண்டில் இந்தியாவில் மட்டும் 84 முறை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது அதில் 21 முறை இணைய சேவை முடக்கப்பட்டு மணிப்பூர் முதலிடத்தில் உள்ளது.
மனித உரிமை மீறல்கள், கொலைகள் சித்திரவதை, கற்பழிப்பு அல்லது வெளிப்படையான போர்க்குற்றங்கள் மற்றும் அட்டூழியங்கள் ஆகியவை 17 நாடுகளில் இணைய முடக்கத்தால் மூடி மறைக்கப்பட்டது.
இந்த 17 நாடுகள் இந்தியாவில் மட்டும்தான் அதிகளவில் அதாவது 6 முறை இணையம் முடக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 2019ஆம் ஆண்டில் CAA போராட்டத்தின்போது இந்தியாவில் 121 முறையும், மணிப்பூர் கலவரம் உச்சத்தைத் தொட்ட காளங்களான 2023ஆம் ஆண்டில் 116 முறையும் இணைய சேவையை முடக்கி இந்தியா முதலிடத்திலிருந்தது குறிப்பிடத்தக்கது.