internet

img

ஐஆர்சிடிசி இணையதளம் திடீரென முடங்கியது!

ஐஆர்சிடிசி தளம் இன்று காலை முதல் திடீரென முடக்கப்பட்டுள்ளது.
ஐஆர்சிடிசி செயலி மற்றும் இணையதளம் என இரண்டும் காலை 10 மணி முதல் முடங்கியது. இதனால் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஐஆர்சிடிசி தளம் இதுபோன்று முடங்குவது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே டிசம்பர் 26-ஆம் தேதி அன்றும் முடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.