internet

img

பேஸ்புக் ஸ்டோரீஸ் பகுதியை நியூஸ் ஃபீட் உடன் இணைக்க திட்டம்!

பேஸ்புக்கில் உள்ள ஸ்டோரீஸ் பகுதியை நியூஸ் ஃபீட் உடன் இணைக்க பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

பேஸ்புக் சமூக வலைத்தளம் உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமாக உள்ளது. இதனை உலகம் முழுவதும் மாதம் தோறும் 220 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள். பேஸ்புக் ஸ்டோரீஸ் வசதியை மட்டும் தினமும் 30 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள்.

இந்நிலையில், பேஸ்புக் தனது நியூஸ் ஃபீட் பகுதியில் பதிவுகளை மேல்/கீழ் நோக்கி ஸ்க்ரோல் (Scroll) செய்து பார்க்கும் நிலையை மாற்றி, ஒரு பதிவிலிருந்து இடது/வலது பக்கமாக ஸ்வைப் (Swipe) செய்து அடுத்தடுத்த பதிவுகளைப் பார்க்கும் அம்சம் சோதனைக் கட்டத்தில் உள்ளது. 

இந்த சமயம், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்றவற்றில் உள்ளதுபோல ஸ்டோரீஸ் என்ற தனி பகுதியை நீக்கிவிட்டு அதையும் நியூஸ் ஃபீட் பதிவுகளுடன் சேர்த்து காட்டும் வகையில் தோற்றம் மாற்றி அமைக்க திட்டமிட்டு உள்ளது.