குடிநீர் விநியோகம் சீராக இல்லை பொன்பரப்பி கிராம மக்கள் மறியல்
அரியலூர், செப்.16 - செந்துறை அருகே சீரான குடிநீர் கேட்டு கிராம மக்கள் திங்களன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த பொன்பரப்பி கிராமத்தில் வசிக்கும் சுமார் 1,200-க்கும் மேற்பட்ட மக்க ளுக்கு ஊராட்சி சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப் பட்டு வருகிறது. இந்நிலையில் திங்கள் கிழமை அங்குள்ள 3 ஆவது வார்டு மக்க ளுக்கு முறையாக தண்ணீர் வழங்கப்பட வில்லை. இதனால் அப் பகுதி மக்கள் செந்துறை - ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடு பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற செந்துறை காவல் துறையினர், உரிய நேரத் தில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக் கப்படும் என தெரிவித்த தையடுத்து கலைந்து சென்றனர்.
இரும்புத்தலை ஊராட்சியில் மின்மாற்றி அமைக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
பாபநாசம், செப்.16 - தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகே இரும்புத் தலை ஊராட்சியில் 2500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். 1500 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் உள்ளன. இப்பகுதியில் ஆற்றுப் பாசனத்தை மேற்கொள்ள முடியாததால், பாசனத்திற்கு மின் மோட்டாரை நம்பியுள்ளனர். இப்பகுதியில் குறைந்தழுத்த மின் விநியோகம் இருப்பதால், மின் மோட்டாரைக் கொண்டு பாசனத்தை மேற்கொள்ள முடியவில்லை. இதனால் நெல் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் மின் மாற்றி அமைத்தால், குறைந்தழுத்த மின் விநியோகத்தால் அவதிப்படும் விவசாயிகளின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்கின்றனர் அப்பகுதி விவசாயிகள். மாவட்ட நிர்வாகம் இதில் உரிய கவனம் செலுத்துமா?
வேளாண் விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை வசதி
தஞ்சாவூர், செப்.16 - தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், பூதலூர், திருவை யாறு, ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், பாபநாசம், அம்மாபேட்டை, கும்பகோணம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் ஆகிய 14 வட்டார தலைமையிட வேளாண்மை விரிவாக்க மையங்களில், இதுவரை இடு பொருட்கள் பெற ரொக்கப் பணம் செலுத்தும் நிலை இருந்தது. தற்போது பணமில்லா பரிவர்த்தனை மூலம் தங்க ளுக்கு தேவையான விவசாய இடுபொருட்களை விவசாயி கள் பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜிபே, போன் பே, பேடிஎம், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவை மூலம் விவசாயிகள் தங்க ளுக்கு தேவையான இடுபொருட்களான விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் மற்றும் ஜிங்க் சல்பேட் போன்றவற்றை உடனுக்குடன் பட்டியலிட்டு பெற்றுக் கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணமில்லா பரிவர்த்தனைக்கு தேவையான கையடக்க மின்னணு கருவிகள், அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களுக்கும் இந்தியன் வங்கியின் மூலம் வழங்கப்பட்டு, இந்த சேவை இலவசமாக விவசாயி களுக்கு வழங்கப்படுகிறது. மின்னணு வசதியின் மூலம் வழங்கப்படும் பணமில்லா பரிவர்த்தனையினை விவசா யிகள் பெருமளவில் பயன்படுத்தி தங்களுக்கு தேவை யான இடுபொருட்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
செப்.20 புதுக்கோட்டையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
புதுக்கோட்டை, செப்.16 - வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 20.09.2024 அன்று புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறு வனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ள னர். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ போன்ற கல்வித் தகுதியுடைய 18 முதல் 35 வயதிற்குட் பட்ட வேலைநாடும் இளைஞர்கள், தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களு டன் கலந்து கொள்ளலாம். மேலும், வேலைநாடும் இளைஞர்கள் “தமிழ்நாடு தனி யார்துறை வேலை இணையம்” www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்தனி யார் துறை வேலைவாய்ப்பு முகாமிலும் கலந்து கொள்ள லாம் என மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்து உள்ளார்.
பெரம்பலூர் தனியார் தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தல்
பெரம்பலூர், செப்.16 - சிஐடியு பெரம்பலூர் மாவட்டக் குழு கூட்டம் மாவட்டத் தலைவர் ரெங்கநாதன் தலைமையில், பெரம்பலூர் துறைமங்கலத் தில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் எஸ்.அகஸ்டின் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். இதில் பெரம்பலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட சாலையோர வியாபாரிகளிடம் கட்டணம் வசூலில் முறைகேடாக நடந்து கொள்ளும் ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்டோக்களுக்கு ஆன்-லைன் மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறை யைக் கைவிட வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் ஷேர் ஆட்டோக்களை சி.என்.ஜி ஆட்டோக் களாக மாற்றம் செய்திட செலவுத் தொ கையை அரசே வழங்கிட வேண்டும். பெரம்பலூரில் இயங்கி வரும் எம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலை, எறையூரில் இயங்கி வரும் காலணி தொழிற்சாலை ஆகிய வற்றில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். மேலும், தொழிலாளர் நலனுக்கு விரோத மான தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கொண்டு வந்துள்ள ஒன்றிய அரசைக் கண்டித்து செப்.23 அன்று பெரம்பலூரில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்து வது. வெண்டர் கமிட்டி கூட்டத்தை கூட்டி சாலையோர வியாபாரிகளின் பிரச்சனை களுக்கு தீர்வு காணக் கோரி பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் பி.கருப்பையன், மாவட்ட நிர்வாகி கள் செல்வி, ஆறுமுகம், கருணாநிதி, ரெங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.
ஓணம் பண்டிகை: கேரள வரலாற்றில் முதன்முறையாக மது விற்பனை சரிவு
திருவனந்தபுரம், செப்.16- கேரளத்தில் ஓணம் பண்டிகையையொட்டி பெவ்கோ கடைகளில் மது விற்பனை இதுவரை இல்லாத அளவிவ் சரிவு ஏற்பட்டுள்ளது. உத்ராடம் வரையிலான ஒன்பது நாட்களில் மொத்தம் ரூ.701 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. கடந்த முறை இந்த விற்பனை ரூ.715 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.14 கோடி விற்பனை குறைவு ஏற்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், உத்தராட தின மது விற்பனை ரூ.4 கோடி அதிகரித்துள்ளது. உத்ராட தினத்தில் ரூ.124 கோடிக்கு பெப்கோ மது விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டு உத்ராட தினத்தில் ரூ.120 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது. அடுத்து வரும் 2 நாட்களின் விற்பனையையும் சேர்த்து ஓணம் பண்டிகையின் மொத்த விற்பனையை பெப்கோ மதிப்பீடு செய்ய உள்ளது.
நடிகை பாலியல் வழக்கை தாமதப்படுத்த நடிகர் திலீப் கதைகளை புனைய முயற்சி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல்
புதுதில்லி, செப்.16- நடிகை தாக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் மாற்றுக் கதைகளை புனைய முயற்சிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் கேரளம் தெரிவித்துள்ளது., விசாரணை நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு முன்வைக் கும் சாட்சியங்களைத் தலைகீழாக்கு வதை நோக்கமாகக் கொண்டே இந்த மாற்றுக் கதைகள் புனையப்படுவதாக வும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கின் முதல் குற்றவாளி யான பல்சர் சுனிக்கு ஜாமீன் வழங்கி யதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பிர மாணப் பத்திரத்தில் மாநில அரசு இதனை சுட்டிக்காட்டியுள்ளது. ஜாமீன் வழங்கப் பட்டால் பல்சர் சுனியின் உயிருக்கு அச்சு றுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கை நீடிக்கும் உத்தி இந்த வழக்கின் விசாரணையை நீட்டிக்க திலீப் முயற்சி செய்து வரு கிறார். இந்த வழக்கின் விசாரணை அதி காரியான பைஜு பவுலஸிடம் திலீப் தரப்பு வழக்கறிஞர் 7 மாதங்களாக 87 நாட்கள் விசாரணை நடத்தினார். இயக்கு நர் பாலசந்திரகுமாரிடம் முப்பத்தி ஐந்தரை நாட்களும் சைபர் தடயவியல் நிபுணரான டாக்டர் சுனில் எஸ்.பியிடம் 21 நாட்களும் தீபா ஏ.எஸ்யிடம் 13 நாட்களும் திலீபின் வழக்கறிஞர் விசாரணை நடத்தி னார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட நபரி டம் வழக்கறிஞர்கள் ஏழு நாட்கள் விசா ரணை நடத்தியதாகவும் உச்சநீதிமன்றத் தில் கேரளம் சுட்டிக்காட்டியது. வழக்கு விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட பெரும்பாலான நபர்கள் நீதிமன்றத்தில் இருப்பதில்லை. மேலும் திலீப்பின் வழக்கறிஞர்கள் விடுப்பு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வருவதாகவும் அரசு உச்ச நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது. குற்றத்தில் நேரடியாக ஈடுபட்ட முதல் ஆறு குற்ற வாளிகளை பாதிக்கப்பட்டவர் அடையா ளம் காட்டியுள்ளார் எனவும் வாக்கு மூலத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இன்று ஜாமீன் மனு மீது விசாரணை வழக்கு விசாரணை நீடிப்பதால் தனக்கு ஜாமீன் ஜாமீன் வழங்க வேண்டும் என்ற பல்சர் சுனியின் வாதத்தையும் கேரளம் நிராகரித்தது. பாதிக்கப்பட்டவர் மீது நடத்தப்பட்டது கொடூரமான தாக்குதல் எனவும், கேர ளத்தில் இது போன்ற சம்பவங்கள் அரி தாகவே நடந்துள்ளது. இதில் ஜாமீன் வழங்குவது உச்சநீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவுகளை மீறுவதாகும், எனவே பல்சர் சுனியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் கோரி யது. பல்சர் சுனியின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் செப்.17 செவ்வாயன்று விசாரிக்கிறது.
செப்.25-இல் கிளாமங்கலத்தில் மக்கள் நேர்காணல் முகாம் முன்கூட்டியே மனுக்களை அளிக்கலாம்
தஞ்சாவூர், செப்.16 - பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் பொருட்டு, “மக்கள் நேர்காணல் முகாம்” என்ற திட்டம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் 2 ஆவது புதன்கிழமை நடைபெற்று வருகிறது. இதையொட்டி, 25.9.2024 (புதன்கிழமை) திருவோணம் வட்டம், திருநல்லூர் சரகம், கிளாமங்கலம் கிராமத்தில் “மக்கள் நேர்காணல் முகாம்” நடத்திட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதில், பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக் களை அளித்து தீர்வு பெறலாம். மேலும், மக்கள் நேர்காணல் முகாம் நடைபெறுவதற்கு முன்னரே மனுக்கள் பெறும் பொருட்டு, பொதுமக்கள் தங்க ளது கோரிக்கை மனுக்களை கிளாமங்கலம் கிராம நிர்வாக அலுவலரிடம் அளித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
நஞ்சில்லா உணவு உற்பத்தி பயிற்சி
தஞ்சாவூர், செப்.16 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை துறையின் சார்பாக வெள்ளிக்கிழமை அணைக்காடு கிராமத்தில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் (பரம்பிரகாட் கிரிஷி விகாஸ் யோஜனா) அங்கக வேளாண்மை குறித்து விவ சாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சிக்கு பட்டுக் கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) ச.சன்மதி தலைமை வகித்து, அங்கக வேளாண்மை குறித்த மத்திய, மாநில திட்டங்களை பற்றி எடுத்துக் கூறினார். அங்கக வேளாண்மை குறித்த தொழில்நுட்பக் கருத்துகளை, விதைச் சான்று அலுவலர் சங்கீதா விவசாயிகளுக்கு, “இயற்கை இடுபொருட் களான ஜீவாமிர்தம், அமிர்த கரைசல், கற்பூர கரைசல், இயற்கை பூச்சி விரட்டி ஆகியவற்றை எவ்வாறு உற்பத்தி செய்வது என்றும், அவற்றை பயன்படுத்தும் முறை பற்றியும் கூறினார். மேலும், பாரம்பரிய நெல் ரகங்களான தூயமல்லி, சீரகச் சம்பா, மாப்பிள்ளைச் சம்பா ஆகியவற்றின் உற் பத்தி முறை மற்றும் பயன் களை எடுத்துக் கூறினார். இந்தப் பயிற்சியில், பட்டுக்கோட்டை வட்டா ரத்தில் உள்ள இயற்கை விவ சாயக் குழுவை சார்ந்த விவ சாயிகள் கலந்து கொண்டு, தங்களின் அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். அணைக்காடு ஊராட்சி மன்றத் தலைவர், விவசா யிகளிடையே இயற்கை விவ சாயம் பற்றி கலந்துரை யாடினார்.
ஆசிரியர்கள் வராததால் மாணவர்கள் கல்வி பாதிப்பு
இராமநாதபுரம், செப்.16- இராமநாதபுரம் மாவட் டம் ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் செ.அ.பா.மு.ஹு அரசு மேல்நிலைப் பள்ளி யில் 780 மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வரு கின்றனர். இந்த நிலையில் 28 ஆசிரி யர்கள் பணி செய்து வரும் நிலையில் சனி, ஞாயிறு விடு முறையை தொடர்ந்தும், செவ்வாய்க்கிழமை விடு முறை காரணமாக திங்கட் கிழமை அன்று 12 ஆசிரியர் மட்டுமே பணிக்கு வந்த தால் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, 28 ஆசிரியர்கள் பணி செய்து வரக்கூடிய பள்ளி தான் என் றும், அதில் 12 ஆசிரியர்கள் தற்போது பள்ளியிலும், 6 ஆசிரியர்கள் இராமநாத புரத்தில் நடக்கும் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வருகிறார்கள் என் றும், மீதமுள்ள 10 ஆசிரி யர்கள் விடுப்பில் உள்ளதாக கூறினார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் பள்ளிக்கு விடுப்பு எடுத்த பத்து ஆசிரி யர்கள் மீது துறை சார்ந்த நட வடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரி க்கை வைத்துள்ளனர்.