இந்திய மக்களின் உடல்நலத்தை, உயிரை மிக துட்சமாக மதித்து செயல்பட்டுள்ள பாஜகவின் மோ(ச)டி அரசாங்கம்:
ஒரு நாட்டில் உள்ள மக்கள் சுகாதாரத்துடனும், நல்வாழ்வுடன் கூடிய நீண்ட ஆயுள் இருப்பதை உறுதிசெய்வதுதான் ஆட்சியாளர்களின் கடமை, இந்த கடமையிலிருந்து முற்றிலும் தவறியுள்ளது ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசு. மக்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழவேண்டிய வாழ்க்கைக்கு அடிப்படை நல்ல சுகாதாரமான சூழல், கன உலோகங்கள் இல்லாத நீரும் உணவும், மாசில்லாத காற்று, பல்லுயிரித்தை பேணல் போன்றவைத்தான், ஆனால் இவை அனைத்திலும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது பாஜக அரசு. யேல் பல்கலைகழகம் நடத்திய ஆய்வில் 2022ம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான தரவரிசையில்(EPI) 18.90 மதிப்பெண்களுடன் இந்தியாவிற்கு கடைசி இடமான 180வது இடம் வழங்கப்பட்டுள்ளது. உலக அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியாவிற்கு கடைசி இடம் கிடைத்திருப்பதால் பல்வேறு இன்னல்களை இந்தியர்கள் சந்தித்துவருகிறார்கள். வட இந்தியர்களின் வாழ்வுகாலம் சுமார் எட்டு ஆண்டுகள் குறைந்துள்ளது, தென் இந்தியர்களின் வாழ்நாள் சுமார் இரண்டரை ஆண்டுகள் குறைந்துள்ளது. உலகத்திலேயே மாசடைந்த நகரமாக இந்தியாவின் பேகுசராய் வந்துள்ளது. அதுமட்டுமல்ல, கடந்த 2019-20 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 12,00,000 லட்சம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளளார்கள், சுமார் 9,29,000 பேர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். ஆசியாவில் புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் வரிசையில் இந்தியாவிற்கு இரண்டாவது இடம், உலகளவில் நடைபெறும் புற்றுநோய் மரணங்களில் 32.9% இந்தியாவில் நிகழ்கின்றன. இவை ஒரு சின்ன உதாரணம் தான், உண்மையில் சொல்வதென்றால் இந்தியர்களின் உடல்நலத்தை கெடுத்து உயிரை எடுப்பதில் பாஜக விற்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.
- ஜி.சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்