tamilnadu

img

இந்திய அரசியல் சாசனத்தில் முதல் திருத்தம் கண்ட தந்தை பெரியார் - யு.கே.சிவஞானம்,

கல்வியில் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட பட்டியலின பழங்குடியின மக்களுக்கு உரிய பங்களிப்பு அளிக்கப்பட வேண்டும் என தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் தந்தை பெரியார். 

முதல் இடஒதுக்கீடு

1928ல் டாக்டர் சுப்பராயன் அவர்கள் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த முத்தையா முதலியார் அவர்கள், தனது பத்திர பதிவு இலாகா வில் வேலைக்கு ஆள் எடுக்கும் ஒவ்வொரு 12 பேரிலும் பார்ப்பனர் அல்லாத இந்துக்கள் 5 பேர், பார்ப்ப னர்கள் இரண்டு பேர், முகமதியர் இரண்டு பேர், ஐரோப்பிய ஆங்கிலேய இந்திய கிறிஸ்தவர்கள் இரண்டு பேர், பட்டியல் இனத்தைச் சார்ந்தவர் ஒருவர் ஆக 12 பேர் இருக்க வேண்டுமென உத்தரவிட்டார். இது பின்பு மாகாண அரசாங்கத்தின் அனைத்து துறைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தந்தை பெரியார் மகிழ்ச்சியோடு இதனை வரவேற்றார். குடியரசு இத ழில் தலையங்கம் எழுதினார். இந்திய நாடு விடுதலை பெற்ற பின்பு டாக்டர்  அம்பேத்கர் தலைமையில் அரசியல்  சாசன வரைவுக்குழு அமைக்கப் பட்டது 1950 ஜனவரி 26 இல் அரசியல் சாசனம் அமலுக்கு வந்தது.  இந்நிலையில் சென்னை மாகா ணத்தைச் சார்ந்த செண்பகம் துரை ராஜன், சி.ஆர்.சீனிவாசன் ஆகியோர் வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானது எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் இவர்களுக்காக ஆஜரானவர் அரசியல் சாசன வரைவுக் குழுவில் அங்கம் பெற்றிருந்த அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர். சென்னை மாகாண மருத்துவக் கல்லூரி மாண வர் சேர்க்கையில் வகுப்புவாரி பிரதி நிதித்துவம் கூடாது என இவர்கள் தொடுத்த வழக்கில் இவர்களுக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதிக மதிப்பெண் எடுப்பவர்கள் என்ற தகுதியின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்க வேண்டும் என்று கூறியதோடு வேலைக்கு ஆள் எடுப்பதிலும் தகுதி அடிப்படையில் தான் தேர்வு செய்ய வேண்டும் என தீர்ப்பளித்தது.  

வெகுண்டெழுந்த பெரியார்

இந்த தீர்ப்பினால் தந்தை பெரியார் வெகுண்டு எழுந்தார். 20 ஆண்டுகளாக வகுப்புவாரி பிரதி நிதித்துவ அடிப்படையில் பிற்படுத்தப் பட்ட பட்டியலின மக்கள் கல்வி வேலை  வாய்ப்பில் இடம் கிடைத்து வந்த நிலையில் இத்தீர்ப்பு அவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளது என தீர்ப்புக்கு எதிராக போராட்ட அறைகூவலை விடுத்தார். ஆகஸ்ட் 14ஆம் தேதி வகுப்பு வாரி உரிமை கோரிக்கை தினமாக அனுஷ்டிகக் கோரி ஒரு அறிக்கை வெளியிட்டார். மாணவர்கள் பள்ளிக்கு செல்லக்கூடாது, வர்த்த கர்கள் தங்களது கடைகளை அடைக்க வேண்டும். கண்டன ஊர்வலத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிலை யில் பெரியாரின் போராட்டங்கள் கூடாது, மாகாண அரசே உச்சநீதி மன்றத்திற்கு வழக்கினை எடுத்துச் செல்லும் என முதல்வர் காம ராஜர் கூறினார். ஆனால் உச்சநீதி மன்றமும் உயர்நீதிமன்றத் தீர்ப்பை உறுதிப்படுத்தியது. 

தமிழ்நாட்டில்  போராட்ட அலை

இந்நிலையில் 3 12 1950இல் திருச்சியில் அனைத்துக் கட்சிகளும் தமிழ் அறிஞர்களும் பங்கேற்ற மாநாடு தந்தை பெரியாரால் கூட்டப்பட்டது. சென்னை மாகா ணம் முழுவதும் கிளர்ச்சிக்கு திட்ட மிடப்பட்டது. தமிழகத்திற்கு வந்த  அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல், போராட்ட சூழலை புரிந்து மத்திய அமைச்சர வையில் இதன் நியாயத்தை எடுத்துக் கூறினார். ஜவஹர்லால் நேரு தலைமையிலான மத்திய அரசு இந்திய அரசியல் சாசனத்தில் ஓர் திருத்தம் கொண்டு வருவது என முடிவு செய்தது. அதன்படி தந்தை பெரியாரின் போராட்டத்தின் காரண மாக முதல் முதலாக அரசியல் சட்டம் திருத்தப்பட்டது. 243 உறுப்பினர்கள் ஆதரவாகவும் ஏழு பேர் மட்டும் எதிர்ப்பாகவும் வாக்களித்தனர். அர சியல் சட்டத்தில் 15/4 சேர்க்கப்பட்டது

நேரு சொன்னது என்ன?

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அப்பொழுது சட்டத்துறை அமைச்சர். 1951 ஆம் ஆண்டு மேற்கண்ட சட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வருகிற போது சிலர் ஆட்சேபனை செய்தார்கள். விவாதம் நடைபெற்றது. நேரு அவர்கள் தனது பதிலில், சென்னையில் நடைபெற்ற போராட்டம் இந்த முதல் அரசியல் சட்டத்திருத்தத்தை கொண்டு வரும்படி எங்களை செய்துள்ளது. சென்னை போராட்டத்திற்காக இந்தியா முழுவதும்  அரசியல் சட்டத்தை ஏன் திருத்த  வேண்டும் என நீங்கள் நினைக் கிறீர்கள். நாளை இந்தியா முழுவதும் இதன் தேவை ஏற்படும். பின்னால் ஒரு போராட்டத்திற்கு இடம் கொடுக்கக் கூடாது, எனவே தான் இந்த அரசியல் சட்ட திருத்தத்தை செய்கிறோம் எனக் கூறினார். சமூக நிலையிலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பட்டிய லின மற்றும் பழங்குடி மக்களுக்கும் அவர்களின் முன்னேற்றத்தைக் கருதி அரசு எந்த ஒரு சிறப்பு நடவடிக்கையும் மேற்கொள்வதை இந்த விதியின் ஒரு பிரிவு அல்லது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 29/2 பிரிவோ தடை  செய்யாது என்ற சட்டம் 2.6 1951இல் நிறைவேற்றப்பட்டது. அன்றைய குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் 18 6 1951 இல் இந்த முதலாவது இந்திய அரசியல் சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கையெழுத்து இட்டார். இந்தச் சட்டம் தான், இன்று நாடு முழுவதும் அம லாகி வரும் பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்கு அடிப்படை ஆனது.