states

வெள்ளிவிழா மாநாடு காணும் சாலைப் பணியாளர் சங்கம் - மா.பாலசுப்பிரமணியன்,

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கம் 17-09-2000 ல் துவங்கி 17- 9- 2004 முதல் 25 ஆண்டுகள் நெருப்பாற்றில் நீந்தியே வெள்ளிவிழா துவக்கத்தில் அடியெடுத்து வைக்கின்றது. இந்த வெள்ளிவிழா ஆண்டிலும் கூட சாலைப் பணியாளர்களுடைய ஜீவனுள்ள கோரிக்கைகளுக்கான தொடர்ச்சி யான போராட்டங்கள் நீடித்துக் கொண்டே தான் உள்ளது. கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உறுதி செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தும் இயக்கமாக தமிழ்நாட்டில் தமிழ் நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கம்  கடந்த 25 ஆண்டு களில் ஏராளமான வலிகளையும் வேத னைகளையும் தாங்கி ரத்தம் தோய்ந்த வரலாற்றைப் படைத்து வந்துள்ளது.  தொடர்ச்சியாக பலகட்ட போராட்டங் களில் பொய் வழக்குகளை சந்தித்தி ருக்கக்கூடிய இயக்கமாக, சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்ட நிலை யிலும் கூட உறுதிமிக்க போராட்டத்தை  முன்னெடுத்த இயக்கமாக; தமிழ் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை மீட்டு பாதுகாக்க வேண்டும் என்பதற்கான போராட்டத் தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கத்தின் திசைவெளியில் நின்று ஒரு சமூக நோக்கம் கொண்ட இயக்கமாக தமி ழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலைப் பணியாளர் சங்கம் செயல்பட்டு வரு கின்றது. சங்கத்தின்  அமைப்பு தின நாளில் சாலைப் பணியாளர் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் உட்கோட்ட கோட்ட மையங்கள் பல்வேறு மக்கள் சேவைப் பணிகளை முன்னெடுத்து வந்துள்ளோம். யாரும் கண்டு கொள்ளாத  புதர் மண்டிப் போயிருக்கிற மயானங்களை தூய்மைப்படுத்தி அதை மக்கள் எளிதாக பயன்படுத்தும் நிலைமைக்கு கொண்டு வருவது; பராமரிக்கப்படாத பேருந்து நிழற் கூடத்தை கட்டிடங்களை வர்ணம்  பூசி பராமரிப்பது அரசு அலுவல கங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் முட்புதர்கள் மண்டிப் போயிருக்கிற வளாகத்தை புதர்களை அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்தி மக்கள் பயன்படுத்துவதற்கான உடல்  உழைப்பு தான பணிகளை முன்னெடுக் கும் இயக்கமாகவும்; ரத்த தானம் வழங்கி உயிர் காக்கும் பணியையும்; கண்தானம் உடல் தானம் போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறோம்.

அதோடு மட்டுமல்ல தமிழகத்தில் ஆதரவற்ற குழந்தைகள் முதி யோர் இல்லங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேவையான பயன்பாட்டு பொருட்களும்  அன்னதானமும் அமைப்பு தின நாளில் வழங்கி வரக் கூடிய சமூக சேவைப் பணிகளையும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் கடந்த 25 ஆண்டுகளில் முன்னெடுத்து வருகின்றது. தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் தற்போதைய அரசு மக்கள் நலனுக் கான அரசாக செயல்பட்டு வருவது  என்பது ஒரு புறத்தில் பாராட்டப்படக் கூடிய விஷயமாக இருந்தாலும், மறு புறத்தில் அரசின் துறைகளில் அவுட் சோர்சிங் ஒப்பந்த முறைகளில்  கிராமப் புற வேலையில்லாத இளைஞர் களுக்கு சொற்பத்தொகையை கொடுத்து அத்தக்கூலி பணி நிய மனங்கள் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.  நெடுஞ்சாலைத் துறையில் 1997 க்கு பிறகு சாலைப் பணியாளர் பணி நியமனம் என்பது இல்லை. தற்போது 74021 கிலோமீட்டர் சாலை கள் பராமரிக்கப்பட்டு வருகிற நிலையில் சற்றேறக்குறைய 6,500 சாலைப் பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளார்கள். இச்சாலைகளில் 18,500க்கும் மேற்பட்ட சாலைப் பணி யாளர்கள் பணியாற்ற வேண்டும். 6500 பேர் மட்டுமே பணியாற்றிக் கொண்டிருக்கிற இச்சூழலில்  எட்டு கிலோமீட்டருக்கு இரண்டு சாலைப் பணியாளர்கள் என்ற அடிப்படையில் மலைப் பாதைகளில் நாலு கிலோ மீட்டருக்கு இரண்டு சாலை பணி யாளர்கள் என்ற அடிப்படையிலும் சற்றேறக்குறைய 13500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நெடுஞ்சாலை த்துறையில் காலியாக இருக்கின்றன.  தமிழக அரசு 13,000 கிராமப்புற இளைஞர்களுக்கு சாலைப்பணியாள ராக பணிநியமனம் வழங்க முன்வர வேண்டும். 

17.09.2024 இன்று வெள்ளிவிழா மாநில பிரதிநிதித்துவ பேரவையை சிறப்பு மாநில மாநாடாக திண்டுக்கல் மாநகரில் முன்னெடுக்கிறது சங்கம்.  இத்தருணத்தில் கீழ்க்கண்ட முழக்கங் களை முன்வைக்கிறது. n மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும்.  n    மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடி அமைத்து சுங்கவரி வசூலிக்க தனியார் கார்ப்பரேட் முதலாளி களுக்கு அனுமதி வழங்கக் கூடாது.  n    கிராமப்புற இளைஞர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.  n சாலைப் பணியாளர்களின் 41 மாத  கால பணிநீக்க காலத்தை பணிக்கால மாக முறைப்படுத்த வேண்டும்.  n சாலைப் பணியாளர்களில் உயிர் நீத்தோரின் குடும்பத்திலிருந்து கருணை அடிப்படையில் விரைந்து பணி நியமனம் வழங்க வேண்டும். n சாலைப் பணியாளர்களுக்கு தொழில் நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழிய ருக்குரிய ஊதிய மாற்றம் ரூ.5,200 ரூ.20,200 தர ஊதியம் 1,900 வழங்க வேண்டும்.  n சாலைப் பணியாளர்களுக்கு ஊதி யத்தில் 10% ஆபத்து படி, நிரந்தர பயணப்படி சீருடை சலவைப்படி வழங்க வேண்டும்.  இந்த வாழ்வாதார கோரிக்கை களை வென்றெடுப்பதற்கான  தொடர்ச்சியான போராட்டத்தை மாநாடு  சூளுரைக்கவுள்ளது. தமிழகத்தின் மக்கள் சொத்தாம் நெடுஞ்சாலைத் துறையை மக்கள் சேவைத்துறையாக தொடர்ந்து செயல்படச் செய்திட;     தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுத்து நிறுத்திட இந்த இயக்கம் தொடர் நடவடிக்கைகளை மாநாடு முன்னெடுக்க இருக்கின்றது.