states

img

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை மாநில அரசுகளே ஏற்று நடத்துக!

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை மாநில அரசுகளே ஏற்று நடத்துக!

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை மாநில அரசு களே  ஏற்று நடத்த வேண் டும் என்று மின் ஊழியர் கூட்டமைப்பின் அகில இந்திய மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய மின் ஊழியர் கூட்டமைப்பின் 10 ஆவது அகில இந்திய மாநாடு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த 10ஆம் தேதி தொடங்கி 12 வரை மூன்று நாட்களாக நடைபெற்றது. சங்கக்கொடியை  ஏற்றி வைத்து, மாநாட் டிற்கு அகில இந்திய தலைவர் எளமரம் கரீம் தலைமை தாங்கினார்,  சிஐடியு அகில இந்திய பொதுச்செயலாளர் தபன்சென் தொடங்கி வைத்து உரையாற்றினார். சங்க பொதுச் செய லாளர் பிரசந்தா நந்தி சவுத்ரி வேலையறிக்கை யையும் அகில இந்திய பொருளாளர் எஸ். ராஜேந்திரன் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.

எதிர்காலத்தில் சங்கம் செல்ல வேண்டிய பாதை குறித்து காணொலிக் காட்சியு டன் அகில இந்திய செயலாளர்  சுதீப் தத்தா பேசினார்,  அமைப்பின் வளர்ச்சி போக்கு குறித் தான அறிக்கையை அகில இந்திய துணை தலைவர் லம்பா சமர்ப்பித்து பேசினார், அமைப்பு விதிகளில் திருத்தங்களுக்கான ஆலோ சனையை முன்மொழிந்து சங்க செயல் தலை வர் தேவராய் பேசினார் உலகத் தொழிற்சங்க  சம்மேளன அமைப் பின்  எனர்ஜி மற்றும் வேதியியல் பிரிவு பொதுச் செயலாளர் மொபோ பக்கேடி எட்வின், அகில இந்திய மின்சாரத் தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் மோகன் சர்மா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  புதிய நிர்வாகிகள் மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய் யப்பட்டனர். அகில இந்திய தலைவராக முன்னாள் எம்.பி., எளமரம் கரீம், பொதுச்செ யலாளராக சுதீப் தத்தா, பொருளாளராக எஸ். ராஜேந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இவர்களுடன் 25 நிர்வாகிகள், 30 செயற் குழு உறுப்பினர்கள், 74 பொதுக்குழு உறுப்பி னர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்னதாக 10ஆம் தேதி நடைபெற்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர்  பங்கேற்றனர். மாநாட்டில் மின்சார வாரியங்களை தனி யார் மயப்படுத்தக்கூடாது,ஒப்பந்த  ஊழியர் களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை அதானி போன்ற  கார்ப்பரேட் முதலாளிகளிடம் வழங்காமல் மாநில அரசுகளே ஏற்று நடத்த வேண்டும்,  மின் உற்பத்தியை மாநில அரசுகளே திட்டமிட்டு  நடத்த வேண்டும், மின்சார சட்டதிட்ட மசோ தாவை திரும்ப பெற வேண்டும் என்பன உட்பட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.