அன்பும் அர்ப்பணிப்பும் கொண்ட மக்கள் தலைவர்
தோழர் கோ.வீரய்யன்
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மகத்தான பல மக்கள் தலைவர்களை உருவாக்கி யுள்ளது. அவர்களில் முக்கி யமானவரும், பல தலை வர்களையும் தோழர்களை யும் உருவாக்கி வளர்த்த வருமான தோழர் கோ. வீரய்யன் அவர்கள் வர லாற்றில் என்றென்றும் நினைக்கப்படுவார். 1932 ஆம் ஆண்டு பிறந்து கிராம சூழலில் முதல் வகுப்பை அறிந்தவர்களிடம் கற்று, 2 முதல் 4 ஆம் வகுப்பு வரை திண்ணைப் பள்ளிக்கூ டத்தில் இரவு நேரத்தில் மட்டும் இரண்டு ஆண்டுகள் படித்ததுதான் இவரது முறைசார் கல்வி.
புரட்சிகர பாதையில் உறுதியான
காலடிகள் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகி படிப்படியாக பல பொறுப்பு களில் பணியாற்றி மாநில செயற்குழு உறுப்பி னர் வரை உயர்ந்தார். கட்சி பிளவுபட்டபோது கும்பகோணத்தில் நடந்த மாநிலக் குழு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தமிழ கத்தில் உருவாக்கிய தோழர்களில் முக்கிய மானவர். விவசாயிகள் கங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆகியவற்றில் பல பொறுப்புகளை ஆற்றினார். பாடசாலை போகாத பேராசிரியர் பள்ளி, கல்லூரியில் படிக்காவிட்டாலும், அனுபவப் படிப்பில் பேராசிரியராக விளங்கி னார். காவிரி நீர் பாசனம் பற்றி ஆற்றுத் தலைப்புகளிலிருந்து வாய்க்கால்கள், வடிகால்கள் வரை அனைத்தும் அவருக்கு அத்துப்படி. அத்துறையில் பணியாற்றிய பொறியாளர்களே வியக்கும் அளவுக்கு விவரங்களை ஆழமாக எடுத்துரைப்பார்.
நிலமற்றவர்க்கு நிலம் பெற்றுத் தந்த வீரர்
தஞ்சை மாவட்டத்தில் பூண்டி வாண்டை யார், கபிஸ்தலம் மூப்பனார், வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியார், வலிவலம் தேசிகர், உக்கடை தேவர், நெடும்பலம் சாமியப்பா முதலியார் போன்ற நிலப்பிரபுக்களிடம் குவிந்திருந்த நிலங்களை விவசாய தொழி லாளர்களுக்குப் பெற்றுத்தர போராடினார். நில உச்சவரம்பு சட்டத்தை அமுலாக்கவும், குத்தகைதாரர்களுக்கு சலுகைகள் பெறவும் அயராது உழைத்தார். இதனால் சுமார் இரண்டு லட்சம் ஏக்கர் நிலங்கள் நிலமற்ற ஏழைகளுக்குக் கிடைத்தது. மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சியில் இல்லாத ஒரு மாநிலத்தில் இவ்வளவு நிலம் கைமாறியது ஒரு வரலாற்று சாதனையே.
போராளிகளின் பாதையில் ஒரு முன்னோடி
தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன், ஏ.நல்ல சிவன், என்.சங்கரய்யா, என்.வரதராஜன் போன்ற தலைவர்களின் வழிகாட்டுதலிலும், தோழர் கோ.வீரய்யன், கே.ஆர்.ஞானசம் பந்தம், கோ.பாரதிமோகன், பி.எஸ்.தனுஷ் கோடி, எம்.செல்லமுத்து போன்றோரின் களப் பணியாலும் கட்சி வலுவடைந்தது. திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தோழர் பி.எஸ்.டி. ஒரு முறையும், தோழர் செல்லமுத்து இரு முறையும் ஆற்றிய பணிகள் கட்சியின் செல்வாக்கை பல மடங்கு உயர்த்தின. வெண்மணி படுகொலை நிகழ்ந்த 1968 ஆம் ஆண்டுவரை விவசாய தொழிலாளர் கூலி உயர்வுக்கான போராட்டங்கள் ஆண்டு தோறும் நடந்தன. பின்னர் நிலப்பிரபுக்களின் வலு குறைந்து, தொழிலாளர்களுக்கு நியாய மான கூலி கிடைக்கும் நிலை ஏற்பட்டது. தோழர் பி.சீனிவாச ராவ் அவர்களின் வரு கைக்குப் பிறகு விவசாய தொழிலாளர்களின் போராட்டங்களும், சாதியக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களும் வலுப்பெற்றன. மக்களுக்காக போராடிய மாபெரும் சட்டமன்றத் தலைவர் நாகை தொகுதியில் இருமுறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி, மக்கள் பிரச்சனை களுக்குத் தீர்வு காணத் தொடர்ந்து போராடி னார். விவசாய உயர்மட்டக் குழுக்களிலும், வெண்மணி சம்பவத்திற்குப் பிறகு அமைக்கப் பட்ட கணபதியா பிள்ளை கமிஷனிலும், கோ லப்பன் குழுவிலும் இடம்பெற்று கோரிக்கை களை வெற்றிகரமாக முன்வைத்தார். எளிமையின் சிகரம், உறுதியின் அடையாளம் எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதில் பிடிவாதமாக ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். சுமார் மூன்று ஆண்டுகள் சிறை யில் இருந்தார். இந்திய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு 18 மாதங்கள் கடலூர் சிறையில் இருந்தார். அவருக்கு எதிராக காவல்துறை புனைந்த பொய் வழக்குகள் ஏராளம், அனைத்தையும் சட்டப்படி எதிர் கொண்டு விடுதலையானார். கிராமப்புறங்களுக்குச் செல்லும்போது அங்கு நமது தோழர்கள் வீட்டிலேயே தங்கி, உணவுண்டு கூட்டங்களை நடத்தி வந்தார். வலிவலம் தேசிகர் பண்ணையில் நில உச்ச வரம்பு சட்டத்தை விட அதிகமாக இருந்த நிலம் விவசாயிகள் கையிலேயே கிடைக்க, இரவு முழுவதும் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் கையெழுத்தான பிறகே உணவருந்தினார். என் வாழ்வில் ஒரு வழிகாட்டி என்னைப் பொறுத்தவரை, அவர் எனக்கு ஆசிரியர் என்று சொன்னால் அது மிகச் சரியாக இருக்கும். அவ்வளவு நெருக்கமாக எனக்கு ஆலோசனைகள் பலவற்றை வழங்கியவர். எனது குடும்பத்தோடும் நெருக்க மாக பழகியவர். என்னுடைய சொந்தப் பிரச்ச னைகள் எதையும் அவரிடம் கலந்து கொள்ளா மல் நான் முடிவு செய்ததில்லை. தஞ்சையில் சில மாநாடுகளை நடத்தும் பொறுப்பில் நெருக்கடி ஏற்பட்டபோது, முழுமையாக துணை நின்று அனைத்து உதவிகளையும் செய்தார். அவரது உடல்நலம் குன்றிய காலத்திலும், மாதம் ஒரு நாள் அவரைச் சந்தித்து வந்தேன். செங்கொடி காக்கும் மாவீரனின் அமரத்துவப் பயணம் தோழர்களைப் பாதுகாத்து வளர்ப்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர். தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி போன்றவர்களின் வறு மையைப் போக்க முடிந்த உதவிகள் அனைத்தையும் செய்தார். சோவியத் கம்யூ னிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் தோழர் அப்துல் வஹாப் அவர்களோடு சோவி யத் யூனியன் பயணம் மேற்கொண்டதும் அவரது வாழ்க்கையின் முக்கியத் தருணம். தனது வாழ்க்கை வரலாற்றை “செங்கொடி யின் பாதையில் நீண்ட பயணம்” என்ற புத்தகமாக வெளியிட்டார். இந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்பது தோழர்களின் விருப்பம். அது கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் 60 ஆண்டு கால வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவும்.