states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிவசேனா (யுபிடி) எம்எல்ஏ ஆதித்யா தாக்கரே

பாஜக தேர்தலின் போது அளித்த வாக்குறுதி களை எல்லாம் மீறி செயல்படுகின்றது. இது வித்தியாசமான வெட்கக்கேடான கொள்கை. இன்று நமது சகோதரிகளுக்கு ரூ.1500 மட்டுமே வழங்கப்படுகிறது. இவ்வாறு பயனடையும் பெண்களின் எண்ணிக்கையை குறைக்கும் பணியும் தற்போது நடந்து வருகிறது.

பிடிபி கட்சி தலைவர் மெகபூபா 

ஒரு புறம் உமர் ஃபாரூக்குக்கு இசட் + பிரிவு பாதுகாப்பு அளித்த இந்திய அரசு மறுபுறம் அவரது கட்சியை தடை செய்துள்ளது. இந்த செயல் எனக்குப் புரியவில்லை. இன்னும் எவ்வளவு காலம் பலத்தை பிரயோகிப்பது என்ற கொள்கையைத் தொடர்வார்கள்? இது நல்ல விஷயம் இல்லை.

பத்திரிக்கையாளர் சுஷாந்த் சிங்

மத்திய ஆயுதப்படைகளில் நிறைய காலிப் பணியிடங்கள் இருபதற்கு காரணம் மக்கள் அதில் சேர விரும்பாததால் அல்ல. முக்கியமான துறைகளில் கூட மக்களுக்கு போதிய வேலைவாய்ப்பை வழங்க மோடி அரசு விரும்பவில்லை என்பதே.

காங், பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் 

பணமோசடி, வரி ஏய்ப்பில் ஈடுபட மொரிஷியஸில் உள்ள சிறிய நிறுவனங்களை அதானி மற்றும் அவரது கூட்டாளிகள் பயன்படுத்தியனர். அங்கு சென்றுள்ள மோடி நெருங்கிய நண்பர்களின் நிதி மோசடிக்கு எதிராக வழக்குத் தொடர தேவையான தகவல்களைப் பகிர்ந்து கொள்ள மொரிசியசை கேட்பதற்கு பதில் அவர்களைத் தப்பிக்க விடுவதன் மூலம் தொடர்ந்து பாதுகாப்பார் என்று நாங்கள் அஞ்சுகிறோம்.