science

img

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல்!

கடந்த 9 மாதங்களாக விண்வெளி மையத்தில் சிக்கித் தவித்து வரும் சுனிதா வில்லியம்ஸ், புட்ஸ் வில்மோர் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி வீரர்கள் புட்ச் வில்மோர் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதாவில்லியம்ஸ், கடந்த ஜூன் 5, 2024 அன்று போயிங்கின் ஸ்டார்லைனரில் 10 நாள் பயணமாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். ஆனால், ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக அவர்கள் இருவரும் பூமிக்கு திரும்ப முடியாமல் இருந்தது. இந்த நிலையில், கடந்த 9 மாதங்களாக விண்வெளி மையத்தில் சிக்கித் தவித்து வரும் சுனிதா வில்லியம்ஸ், புட்ஸ் வில்மோர் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இவர்களை பூமி அழைத்த வர இருந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தை கொண்டு செல்லும் பால்கன் 9 ராக்கெட்டில் கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-10 மிஷன் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.