சென்னையில் காரல் மார்க்ஸ் சிலை அமைக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வர வேண்டும் என சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கோரிக்கை வைத்துள்ளார்.
மாமேதை காரல் மார்க்ஸ் நினைவு தினத்தையொட்டி சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மரக்கன்று நட்டார். இந்திய மாணவர் சங்கம் நடத்திய இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேஸ்வரன், மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ச.ஆனந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்விம் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம், நாளை காரல் மார்க்ஸ் நினைவு தினம்; இதையொட்டி, சென்னையில் காரல் மார்க்ஸ் சிலை அமைக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.