தமிழ்நாடு பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், சென்னையில் 100 இடங்களில் அதனை நேரலை செய்ய இருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநிலத்தின் 2025-2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாளையும், வேளான் பட்ஜெட் 15-ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்ட்ரல் ரயில் நிலையம், முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் டவர் பூங்கா கோயம்பேடு பேருந்து நிலையம் மெரினா கடற்கரை, பாண்டிபஜார் சாலை, கத்திப்பாரா பூங்கா. பெசண்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, டைடல் பார்க் சந்திப்பு உள்ளிட்ட 100 இடங்களில் 14, 15 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணி முதல் எல்இடி திரையின் வாயிலாக தேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.