முன்னாள் துணைவேந்தர் உட்பட 16 பேர் மீது வழக்கு
கோவை பாரதியார் பல்கலைக்கழ கத்தில் கம்ப்யூட்டர் வாங்கியதில் முறை கேடு செய்ததாக முன்னாள் துணை வேந்தர் கணபதி, பல்கலைக்கழக துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் உட்பட 16 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். பாரதியார் பல்கலைக்கழகத்தில் 2016 முதல் 2018 வரை கம்ப்யூட்டர் உள் ளிட்ட உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தியது. 85 லட்சம் ரூபாய்க்கு 500 கம்ப்யூட்டர்கள், தொழில் நுட்ப உபகரணங்கள், யுபிஎஸ் உள்ளிட் டவை வாங்கப்பட்டன. டெண்டர் விடா மல் தனித்தனியாக உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்து இருப் பது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை யில் தெரியவந்தது. இதையடுத்து முன் னாள் துணைவேந்தர் கணபதி, முன் னாள் பதிவாளர்கள் மோகன், வனிதா, முன்னாள் துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அங்கையர்கண்ணி, ராஜேந்திரன், தேவி, ஜெயபால், ஞான சேகரன், சாத்தப்பன், சுரேஷ், சரவணக் குமார், காமேஷ் உட்பட 16 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கூட்டு சதி, மோசடி உள்ளிட்ட 4 பிரிவு களில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீ சார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணி நியமன ஆணை கொடுக்க லஞ்சம் வாங்கிய வழக்கில் ஏற்கனவே முன்னாள் துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டது குறிப் பிடத்தக்கது.