பெல் நிறுவன பொது மேலாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
திருச்சி திருவெறும்பூர் அருகே பாரத மிகுமின் நிறு வனம் (பெல்) செயல்பட்டு வருகிறது. இங்கு 7 ஆயிரத் துக்கும் அதிகமானோர் பணி புரிகின்றனர். இந்நிறுவனத்தில், பெல் கணேச புரம் 8-வது தெருவை சேர்ந்த சண்முகம் (50), இணைப்பில்லா குழாய் வடி வமைப்பு (எஸ்எஸ்டிபி) பிரிவில் பொது மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பார்வதி இப்பகுதி யில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர்களது ஒரே மகள் பொறியியல் படித்து வருகிறார். இந்நிலையில், சண்முகம் செவ்வாய்க்்கிழமை காலை 8.30 மணிக்கு பணிக்கு சென்றுள்ளார். மாலை 4.30 மணிக்கு பணி முடிந்தும் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி மொபைல் போனில் தொடர்புகொண்ட போது அவர் போனை எடுக்க வில்லை. பெல் நிறுவனத்தை தொடர்புகொண்ட போது, அவரது அறைக் கதவு சாத்தியிருப்பதாக தெரிவித்தனர். இரவு நேரம் செல்லச் செல்ல சண்முகம் குடும்பத் தினர் பதற்றமடைந்தனர். அவ ரது மனைவி பார்வதி மீண்டும் பெல் நிறுவன உயரதிகாரி களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்களின் உத்தரவின்படி அங்கிருந்த ஊழியர்கள் சண்முகம் அறைக்குச் சென்றனர். அப்போது அறையின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. அதையடுத்து, அதிகாலை 1.30 மணிக்கு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சண்முகம் அங்குள்ள சோபாவில், நெற்றிப் பொட்டில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இறந்து கிடத்தார். சோபா அருகே ரத்தம் பெருகி ஓடி, உறைந்து கிடந்தது. அதனை பார்த்து அதிர்ச்சி யடைந்த ஊழியர்கள் உடனடியாக பெல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பெல் போலீசார், சண்முகத்தின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணை யில் சண்முகத்துக்கு இருதயநோய் பிரச்சனை இருப்பதும், அதற்குரிய சிகிச்சை பெற்று வருவதும் தெரிய வந்தது. இதுகுறித்து பெல் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சண்முகம் சுட்டுக்கொண்டு இறந்த துப்பாக்கிக்கு உரிய உரிமம் இல்லை (கள்ளத் துப்பாக்கி). அது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி என்பதும், சண்முகம் தில்லியில் பணி யாற்றியபோது அந்தத் துப்பாக்கியை வாங்கி இருக்கலாம் என்பதும் போலீ சார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.