திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் நீலக்குடி யில் அமைந்துள்ள தமிழ் நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் உள்ள தமிழ்த் துறையின் சார்பாக ‘தற்கால தமிழ் ஆய்வு போக்குகள்’ என்ற தலைப்பில் செவ்வா யன்று முதல் மூன்று நாள் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பேராசிரியர் இரா. திருமுருகன் கருத்த ரங்கத்தை துவக்கி வைத்தார். தொடக்க விழாவில் சீனா வின் தலைநகரமான பெய் ஜிங்கை தலைமையகமாக கொண்ட அயல்மொழி ஆராய்ச்சி பல்கலைக்கழ கத்தின் தமிழ் துறை தலை வர் பேராசிரியர் ஷோஷின் இணையதளம் மூலம் கலந்துகொண்டு கருத்துரை யாற்றினார். நிகழ்வில் தமிழ் துறை புல முதன்மையர் பேரா. ரவி, பேராசிரியர் தேவநாய கம், நன்னூல் பதிப்பகம் உரிமையாளர் மணலி அப்துல் காதர், பேராசிரியர் வேல்முருகன் மற்றும் உதவி பேராசிரியர்கள் சுபாஷ், குமார், ரமேஷ், ஜவகர், ஆய்வாளர்கள், மாண வர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.