india

img

துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்பு!

இந்தியாவின் 15 ஆவது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தன்கர், கடந்த ஜூலை 21 அன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், துணை ஜனாதிபதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன், 'இந்தியா' கூட்டணி சார்பில் சுதர்ஷன் ரெட்டி ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதியன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் மொத்தம் 781 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில், 767 உறுப்பினர்கள் வாக்களித்தனர் (98.2 சதவிகிதம்). 13 பேர் வாக்களிக்கவில்லை. பதிவான வாக்குகள் மாலை 6 மணிக்கு எண்ணப்பட்ட நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் மொத்தம் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

இந்த நிலையில் இந்தியாவின் 15 ஆவது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றுக்கொண்டார். ஜனாதிபதி திரௌபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.