india

img

செயில் முறைகேடு: ஆவான் ஸ்டீல் நிறுவனம் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு

செயில் நிறுவனத்தில் ரூ.370 கோடி வரை முறைக்கேடு செய்தது தொடர்பாக ஆவான் ஸ்டீல் நிறுவனம் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL) நிறுவனத்திடம் குறைந்த விலையில் எஃகு பொருட்கள் வாங்கி, ரூ.370 கோடி வரை இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்தது தொடர்பாக ஆவான் ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் மீது சிபிஐ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. லோக்பாலின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து, சிபிஐ இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்த விவகாரத்தில், ஜூலை 25, 2025 அன்று செயில் அதிகாரிகள் மற்றும் பிற நபர்களுக்கு எதிராக சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. லோக்பால் (புகார்) விதிகள், 2020 இன் பிரிவு 4(A) இன் கீழ், குற்றம் சாட்டப்பட்ட அரசு அதிகாரியின் அடையாளம் வெளியிடப்படவில்லை.

மேலும், பாஜக-வுக்கு தேர்தல் பத்திரம் மூலம் ரூ.30 கோடி நன்கொடை  வழங்கிய அப்கோ நிறுவனத்துடன் இணைந்து வெங்கடேஷ் இன்ஃப்ரா ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (VIPPL) நிறுவனம் செய்த முறைகேட்டையும் ஏற்கனவே சிபிஐ விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.