மும்பை:
ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தைப் போல, ஆகஸ்ட் 14 பாகிஸ்தான் பிரிவினை நாளும் இந்தியர்களால் மறக்கமுடியாத நாளாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் பேசியிருந்தார்.பாகிஸ்தானையும் உள்ளடக்கிய ‘அகன்ற பாரதம்’ என்ற ஆர்எஸ்எஸ்-ஸின் கனவை நினைவுபடுத்தும் விதமாகமோடி இவ்வாறு கூறியிருந்தார்.இந்நிலையில், பிரதமரின் பேச்சைக்குறிப்பிட்டு, சிவசேனா மூத்தத் தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் ‘சாம்னா’ பத்திரிகையில் பதிலளித்துள்ளார்.அதில், “நாதுராம் கோட்சே, காந்திக்கு பதிலாக முகமது அலி ஜின்னாவை படுகொலை செய்து இருந்தால்இந்தியப் பிரிவினை நடந்து இருக்காது.ஆகஸ்ட் 14-ஆம் தேதியை பிரிவினைஅதிர்ச்சி நினைவு நாளாக கடைப்பிடிக்க வேண்டிய தேவையும் இருந்து இருக் காது” என்று கூறியுள்ளார்.
“அகன்ற பாரதம் பற்றி நாம் நினைத் தாலும், அது சாத்தியம் இல்லை என்பதுதெரிகிறது. ஆனால் நம்பிக்கை எல்லாவற்றையும் விட பெரியது. ஒருவேளைபிரதமர் மோடி அகன்ற பாரதத்தை விரும்பினால், அவர் வரவேற்கப்படுகிறார். பாகிஸ்தானில் உள்ள 11 கோடி முஸ்லிம்களுக்கு என்ன செய்ய போகிறார் என்பதுகுறித்தும் அவர் பேச வேண்டும்” எனவலியுறுத்தி இருக்கும் ராவத், “ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை, நாட்டின் இருப்பு மற்றும் இறையாண்மையை அழிப்பதால் ஏற்படும் வலி என்ன என்பதை நமக்கு ஞாபகப்படுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.