மும்பை:
பாஜகவுடன் இனி கூட்டணிஎன்னும் பேச்சுக்கு இடமில்லை என சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி, பாஜகவுடன் கூட்டணி வைத்து சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தது.இந்த கூட்டணிவெற்றி பெற்ற போதிலும் முதல்வர் பதவி யாருக்கு என்ற சண்டையில், சிவசேனா கூட்டணியை முறித்துக் கொண்டது. மேலும் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் புதிய கூட்டணி அமைத்து, அக்கட்சி யின் தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் முதல்வரா னார். தற்போது அவரது ஆட்சி 2 ஆண்டுகளைக் கடந்துள்ளது.இதனிடையே, ‘மகாவிகாஸ் அகாதி’ கூட்டணியிலிருந்து சிவசேனா வெளியேறப் போகிறது; அக்கட்சி மீண்டும் பாஜக கூட்டணியில் இணையப் போகிறதுஎன்று செய்திகள் வெளியான தால் பரபரப்பு ஏற்பட்டது. இது சிவசேனாவுக்கு நெருக்கடி யையும் ஏற்படுத்தியது. இதை யடுத்து அந்தச் செய்திகளை சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மறுத்துள்ளார்.“இனி பாஜகவுடன் கூட்டணிஎன்ற பேச்சுக்கே இடமில்லை. சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணியானது, ஆட்சியை 5 ஆண்டுகள் முழுமையாக நிறைவுசெய்யவே அமைக்கப்பட்டது. நாங்கள் அதற்கு உறுதி பூண்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.“எங்களது கூட்டணி ஆட்சி 10 நாட்களில் கவிழ்ந்துவிடும் என எதிர்க்கட்சி (பாஜக) பேசி வந்தது.ஆனால் இந்தக் கூட்டணி 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. நிச்சயம் மேலும் 3 ஆண்டுக்கால ஆட்சியையும் நிறைவு செய்யும்” என்று ராவத் கூறியுள்ளார்.