tamilnadu

img

மத்தியப் பிரதேச வைரஸ் மராட்டியத்தில் ஊடுருவ முடியாது.. சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் சொல்கிறார்

மும்பை:
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எல்லாம் கட்சிகளை உடைத்தும், எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கியும் அங்கு பாஜக ஆட்சியை பிடித்து வருகிறது. உத்தர்கண்ட் துவங்கி கடைசியாக கோவா, கர்நாடகவரை இதைத்தான் பாஜக செய்தது. தற்போது மத்தியப்பிரதேசத்திலும் காங்கிரஸ் எம்எல்ஏக் கள் 22 பேரை வளைத்துள்ளது.அடுத்தகட்டமாக ராஜஸ்தான், மகாராஷ்டிர மாநிலங்களை பாஜக குறிவைத்துள ளதாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வெளிப்படையாகவே இதனைத்தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சிவசேனா கட்சியின் மூத்தத் தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், ‘மத்தியப் பிரதேச வைரஸ் மகாராஷ்டிராவுக்குள் ஊடுருவ முடியாது” என்று கூறியுள்ளார். “மகாராஷ்டிராவின் சக்திவித்தியாசமானது. 100 நாட்களுக்கு முன்பு இங்கு நடக்கவிருந்த (பாஜக-வின்) அரசியல் ஆப்பரேஷன் தோல்வியில் முடிந்தது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகளின் கூட்டணி பைபாஸ் அறுவைசிகிச்சை செய்து மகாராஷ்டிராவை காப்பாற்றியது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.