லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் உள்ளமாதவ்கஞ் கிராமத்தை சேர்ந்தவர்அலோக் ராம். தலித் இளைஞரானஇவருக்கு, ஜூன் 18 அன்று திருமணம் நடத்துவது என குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.இந்நிலையில்தான், அலாக் ராமிற்கு உள்ளூர் சாதி வெறியர்களிடமிருந்து கொலை மிரட்டல் வந் துள்ளது.
திருமணத்தையொட்டிய மாப் பிள்ளை அழைப்பின்போது, குதிரையில் அமர்ந்து செல்லப்போவதாக அலாக் ராம் கூறியதே சாதி வெறியர்களின் இந்த மிரட்டலுக்குக் காரணம். ஆதிக்க சாதியினர் மட்டுமே குதிரையில் ஊர்வலம் செல்வதற்கு உரிமை பெற்றவர்கள், தலித்துகளுக்கு அந்த உரிமை இல்லை. அப்படியிருக்கையில், அலாக் ராமை மட்டும் குதிரையில் செல்லவிட்டுவிடுவோமா? என்று மாதவ் கஞ்சை சேர்ந்த சாதி வெறியர்கள் கூறியுள்ளனர்.இதுதொடர்பாக அலாக் ராம் தற்போது காவல்நிலையத்தில் புகார்அளித்துள்ளார். தனது உயிருக்குப் பாதுகாப்பு வழங்க அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அலாக் ராமின்தந்தை கயாதின் கூறுகையில், என்மகன் திருமணத்தின்போது, குதிரையில் ஊர்வலமாக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறான். ஆனால், ஆதிக்க சாதியினர் மிரட்டுகின்றனர். ‘தற்போதைக்கு உங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கலாம். ஆனால் திருமணத்திற்கு பிறகு எப்படியும் அலாக் ராமை நாங்கள் கொன்று விடுவோம்’ என்று கூறுகின்றனர். இதனால் என்ன செய்வதுஎன்று எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் மிகுந்த அச்சத்துடன் இருக்கிறோம் என்று குறிப் பிட்டுள்ளார்.
ஆனால், மணமகன் அலாக் ராமோ, ‘அம்பேத்கரால் வரையறுக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்புசட்டத்தை பின்பற்றும் இந்தியநாட்டில் அனைத்து சமூகத்தினருக்கும் எல்லா உரிமையும் இருக்கிறது, மாப்பிள்ளை ஊர்வலத்தில் நான் குதிரையில் ஏறாமல் விடமாட் டேன்’ என்று உறுதி காட்டியுள்ளார்.‘ஆதிக்க சாதியினர் அலாக் ராமின் திருமணத்தில் இடையூறு ஏற்படுத்த எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வார்கள் என்பதால் காவல் துறையினர் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும்’ என்று‘பீம் ஆர்மி’ கட்சியைச் சேர்ந்தஆகாஷ் ராவண் வலியுறுத்தியுள்ளார்.