india

img

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வங்கி மோசடி - ஒன்றிய அரசு, சிபிஐ-க்கு நோட்டீஸ்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCom) நிறுவனத்தின் வங்கி மோசடிக்கு எதிரான பொதுநல வழக்கு தொடர்பாக ஒன்றிய அரசு, சிபிஐ, அமலாக்கத் துறை (ED) மற்றும் அனில் அம்பானிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCom) நிறுவனத்தின் ரூ.31,580 கோடி வங்கி மோசடி தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் செய்திருந்தார். அந்த மனுவில்,  2007–08 காலப்பகுதியில் தொடங்கியதாகக் கூறப்படும் இந்த மோசடிக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் 2025-இல் தான் பதிவு செய்யப்பட்டது. இந்த மோசடியில் வங்கி ஊழியர்கள், அரசு அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்து தகவல்கள் எஃப்.ஐ.ஆர்-இல் குறிப்பிடவில்லை. இந்த வழக்கு விசாரணை அறிக்கையை சிபிஐ, அமலாக்கத்துறை வெளியிட வேண்டும் என கோரப்பட்டது. இந்த மனு மீதாக விசாரணை இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  
அப்போது, இது குறித்து 3 வாரங்களில் பதிலளிக்க ஒன்றிய அரசு, சிபிஐ, அமலாக்கத் துறை (ED) மற்றும் அனில் அம்பானிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.