tamilnadu

img

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிப்பு! - சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்

கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது. இதற்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவையில் 15.84 லட்சம், மதுரையில் 15 லட்சம் மட்டுமே மக்கள் தொகை இருப்பதாகவும், 20 லட்சம் மக்கள் தொகை இல்லாமல் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க முடியாது எனக் கூறி தமிழ்நாடு அரசின் திட்ட அறிக்கையை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியது. இந்த நிலையில், குருகிராம், புவனேஷ்வர், ஆக்ரா, மீரட் உள்ளிட்ட நகரங்களின் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருந்தபோதும் அங்கு மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்கியது எப்படி? என்று சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தமிழ்நாட்டின் மீதான ஒன்றிய அரசின் வஞ்சகம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.