டிஜிட்டல் கைது செய்யப்போவதாக மிரட்டி ஒருவரிடம் மட்டுமே ரூ.32 கோடி மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 57 வயது பெண்ணிடம் போலி டிஜிட்டல் கைது மூலம் ரூ.32 கோடி மோசடி நடைபெற்றுள்ளது.
மோசடியில் ஈடுபட்டவர்கள் தங்களை சிபிஐ அதிகாரி எனக் கூறிக்கொண்டு, உங்களது பெயரை குற்றவாளிகள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். உடனடியாக நீங்கள் கைது செய்யப்படுவீர்கள் எனக் கூறியுள்ளனர். மேலும் இதிலிருந்து விடுபட 90% சொத்துக்களைத் தாங்கள் சொல்லும் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யும்படி மோசடி கும்பல் மிரட்டியுள்ளனர்.
கர்நாடகாவில் ஒரு தனிநபரிடம் அதிகபட்சமாக இவ்வளவு பணம் மோசடி செய்யப்படுவது இதுவே முதல்முறை என அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
