பீகார் சட்டமன்றத்தை கலைக்க பரிந்துரை
பீகார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்க வைத் துள்ளது. தொடர்ந்து பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நவம்பர் 20ஆம் தேதி முதலமைச்சராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. இந்நிகழ்வில் பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிலையில், பீகார் முதலமைச்சர் பதவியை நிதிஷ் குமார் திங்களன்று ராஜினாமா செய்தார். ஆளுநர் ஆரிப் முகமது கானைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கி, சட்ட மன்றத்தை கலைக்க பரிந்துரைத் துள்ளார். அதன்படி, 19ஆம் தேதி சட்ட மன்றம் கலைக்கப்பட்டு, நவம்பர் 20 ஆம் தேதி முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
